Published : 07 Sep 2024 06:13 AM
Last Updated : 07 Sep 2024 06:13 AM

ப்ரீமியம்
அஞ்சலி: கவிஞர் சக்திக்கனல் நாட்டுப்புறக் காவியம் தந்த கவிஞர்

க​விஞர் சக்திக்கனல் கடந்த வாரம் காலமானார். 1931இல் பிறந்த சக்திக்​கனல், தனது நெடிய வாழ்வில் பரவலான இலக்கிய, பண்பாட்டு ஈடுபாடு​களைக் கொண்டிருந்​தாலும் தமிழ்​நாட்டின் தனிப்​பெரும் நாட்டார் காப்பியமான அண்ணன்மார் கதையின் எழுத்து வடிவத்தை உருவாக்​கியவர் என்கிற முறையில் மிகுந்த கவனம் பெற்றவர். ‘அண்ணன்மார் சுவாமி கதை’ புத்தகம் 1971இல் வெளிவந்தது. தமிழில் வெளியான ஒரே நாட்டார் காப்பியம் அண்ணன்மார் கதை.

சக்​திக்கனல் ‘அண்ணன்மார் சுவாமி கதை’யை 1971இல் வெளியிடு​வதற்கு முன்பே 1965இல் அமெரிக்​காவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரெண்டா பெக் அக்கதையின் வாய்மொழி வடிவத்தைச் சேகரித்​திருந்​தார். அமெரிக்​கா​விலிருந்து இங்கு வந்து தாராபுரத்தை அடுத்த ஓலப்பாளையம் என்னும் கிராமத்தில் தங்கி, எரிசனம்​பாளையம் ராமசாமி என்பவர் பாடிய கதையைப் பதிவுசெய்திருந்​தார். ஆனால், அதன் உரைநடை வடிவம் 1992இல்தான் வெளிவந்தது. 1971இல் வெளிவந்த சக்திக்​க​னலின் புத்தகம் கொங்குப் பகுதியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்​தியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x