Last Updated : 12 May, 2018 09:08 AM

 

Published : 12 May 2018 09:08 AM
Last Updated : 12 May 2018 09:08 AM

பிறமொழி நூலகம்: காந்திய வரலாற்றின் பக்கங்கள்

ந்திய விடுதலை இயக்கத்தின் நாயகரான மகாத்மா காந்திக்கும் அந்நியராட்சிக்கு எதிரான விடுதலை இயக்கத்திற்கு வித்திட்ட வங்காளத்திற்கும் இடையே நிலவிய நெருக்கமான உறவை ஆவணங்களின் உதவியோடு சித்தரிக்கும் இந்நூலை மேற்கு வங்க ஆளுநராக இருந்தவரும் மகாத்மா காந்தியின் பேரருமான கோபால்கிருஷ்ண காந்தி தொகுத்துள்ளார். வங்காளத்தின் முன்னோடி சிந்தனையாளரான அமர்த்யா சென் அணிந்துரை வழங்கியுள்ளார். தென்னாப்ரிக்காவிலிருந்து 1896 ஜூலை 4 அன்று கல்கத்தா துறைமுகத்தில் வந்திறங்கியதிலிருந்து இந்தியா விடுதலை பெற்று இரண்டாகப் பிளவுபட்ட 1947 ஆகஸ்ட் 15-க்கு முதல் நாள் கல்கத்தாவில் வந்திறங்கி உண்ணா நோன்பிருந்த காலம் வரையில் வங்காள மண்ணில் மகாத்மா காந்தி மேற்கொண்ட பயணங்கள், கருத்துப் பரிமாற்றங்களை காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் இந்திய விடுதலை வரலாறு, வங்காள அரசியல் வரலாறு, மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றின் பக்கங்களை சித்தரிக்கிறது. காந்தியுடன் உரத்த குரலில் உரையாடிய தலைவர்கள், சிந்தனையாளர்கள், காந்தியை நேரடியாகக் களத்தில் இறங்க வைத்த நவகாளி, கல்கத்தா கலவரங்கள் என வரலாற்றின் பக்கங்கள் நிரம்பித் ததும்பும் இந்த அரிய தொகுப்பை வழங்கியதற்காக நூலாசிரியருக்கு நன்றி பாராட்ட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x