Published : 17 Jan 2018 11:19 AM
Last Updated : 17 Jan 2018 11:19 AM

பெண்களுக்கு உண்மையில் சுதந்திரம் இல்லை

பெ

ண்களுக்கு உண்மை யான சுதந்திரம் நம் நாட்டில் இல்லை என்று எழுத்தாளர் இமையம் குறிப்பிட்டார்.

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவின் மூன்றாம் நாளில் எழுத்தாளர் இமையம் எழுதிய கதைகளில் பெண்கள் பற்றிய விவாதம் நடைபெற்றது. முனைவர் ஆர்.அழகரசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம் பேசியதாவது:

மிகப் பெரிய பிரச்சினை

இந்தியாவில் பலரும் பெண்ணியம் பேசுகிறார்கள். எதைப் பற்றியெல்லாமோ எழுதுகிறார்கள். இந்தியாவில் 90 சதவீத பெண்களின் மிகப் பெரிய பிரச்சினை கழிப்பறைப் பிரச்சினைதான். இதைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்? பிரதமர்களும், முதல்வர்களும், அமைச்சர்களும் வெட்கப்பட வேண்டிய பிரச்சினை இது. எங்களுக்கு வேறு எந்த வசதியும் வேண்டாம். உலக நாடுகளுடன் எல்லாம் போட்டி போட வேண்டாம். எங்களது தாய்கள், சகோதரிகள், மகள்கள் மறைவாக சிறுநீர் கழிக்க இடம் ஏற்படுத்திக் கொடுங்கள், அது போதும்.

எனது ‘பெத்தவன்’ கதையில் வரும் சாதி ஆணவக்கொலை சம்பவத்தை, அது நடக்கும்போது நான் பார்த்திருக்கிறேன். இந்தக் கதை வெளியாகி ஒரு மாதம் கழித்துதான், தருமபுரி திவ்யா - இளவரசன் காதலை மையமாக வைத்துக் கலவரம் நடந்தது. ஆடும், ஆடும் சேர்ந்து வாழ்கின்றன. மாடும், மாடும் சேர்ந்து வாழ்கின்றன. ஆனால், ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ முடிவதில்லை என்பது மிக வினோதமாக இருக்கிறது. அன்பாக இருப்பதையே எல்லா இலக்கியங்களும் கற்றுக்கொடுக்கின்றன. ஆனால் மனிதன் என்கிற மிருகம் கற்றுக்கொள்ளாத ஒரே ஒரு பண்பு அன்பாக இருப்பதுதான். அதைச் சொல்வதுதான் ‘பெத்தவன்’ கதை.

பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று பேசுகிறோம். திருமணமான பெண்கள் பலருக்கு தங்களது ஏடிஎம் பாஸ்வேர்டுகூட தெரியாது. கல்லூரிப் பேராசிரியர்கள், ஏன்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக் கும் பெண்களில் பலர்கூட கணவனால் கட்டுப்படுத்தப்படுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். உண்மையில் பெண்களுக்கு எந்த விதமான சுதந்திரமும் இல்லை. என் மனைவி என்ன உடை அணிகிறார் என்பதை நான் கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், அப்படிச் செய்ய வேண்டும் என இந்த சமூகம் எனக்குக் கற்றுக்கொடுத் திருக்கிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x