Published : 11 Nov 2023 06:19 AM
Last Updated : 11 Nov 2023 06:19 AM

தீபாவளி மலர் வரிசை

‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலர்
விலை:
ரூ.170
கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரை, எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஆயிஷா இரா.நடராசன் உள்ளிட்டோரின் கதைகள், யுகபாரதி, ரவி சுப்ரமணியன், ஏகாதசி உள்ளிட்டோரின் கவிதைகள், ஓவியர் வேதாவின் ஓவியங்கள் என தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மேலும் உற்சாகம் சேர்க்க வந்துள்ளது ‘இந்து தமிழ் திசை தீபாவளி மலர்’. தமிழ்நாட்டில் டைனசோர் வாழ்ந்த பகுதிகளுக்கு ஒரு பயணம், நூற்றாண்டு காணும் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் வெளியாகிப் பிரபலமடைந்த படங்கள் எனப் பல சுவாரசியமான படைப்புகள் கவனமாகத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.

விகடன் தீபாவளி மலர்
விலை:
ரூ.180
எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் கதைகள், இயக்குநர் மாரி செல்வராஜ் நேர்காணல், நகைச்சுவைப் பத்திகள், பயணக் கட்டுரைகள் எனப் பல்சுவைக் களஞ்சியமாக விகடன் தீபாவளி மலர் வெளிவந்துள்ளது.

கலைமகள் தீபாவளி மலர்
விலை: ரூ.200
இந்திரா செளந்தர்ராஜன், காலச்சக்கரம் நரசிம்மா, ஜி.ஏ.பிரபா உள்ளிட்ட பலரின் கதைகள் இதில் உள்ளன. அடையாற்றைப் பற்றிய தன்அனுபவக் கட்டுரைகளும் ஓவியர் ஷ்யாமின் நேர்காணலும் மலருக்குச் சுவாரசியம் கூட்டுகின்றன.

அமுதசுரபி தீபாவளி மலர்
விலை: ரூ.200
பிரபா ஸ்ரீதேவன், சுதா சேஷய்யன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரின் கட்டுரை, வெ.இறையன்பு
ஐஏஎஸ் நேர்காணல், சுபா, மாத்தளை சோமு ஆகியோரின் சிறுகதைகள் எனப் பல்சுவை விருந்து படைக்கிறது அமுதசுரபி தீபாவளி மலர்.

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்
விலை: ரூ.200
இரா.முருகன், பா.ராகவன், மாலன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள், அழகியசிங்கரின் கவிதை, ஆன்மிகம், வாழ்க்கை முறை, நகைச்சுவைக் கட்டுரைகள் எனச் சுவைமிகு வாசிப்புக்கு உகந்ததாக வந்துள்ளது லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x