Last Updated : 16 Jan, 2018 09:22 AM

 

Published : 16 Jan 2018 09:22 AM
Last Updated : 16 Jan 2018 09:22 AM

பொய்களை உடைக்கும் பேனா முனை

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் தி இந்து ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழா எட்டாவது ஆண்டாக ஜனவரி 14-ம் தேதி தொடங்கியது. இந்த மூன்று நாள் நிகழ்வு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் அறக்கட்டளையின் ‘சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா’வைச் சேர்ந்த குழந்தைகளின் இசை நிகழ்ச்சியுடன் இலக்கியத் திருவிழா தொடங்கியது.

‘தி இந்து’ குழும இயக்குநரும் ‘லிட் ஃபார் லைஃப்’ ஒருங்கிணைப்பாளருமான நிர்மலா லக்ஷ்மண் தனது வரவேற்புரையில், “நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சுதந்திரமாக இயங்குவதற்கான தேவையின் அவசியம், தணிக்கைக் கோட்பாடுகள், ஜனநாயக மதிப்பீடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுவருவது குறித்து இந்த விழாவில் விவாதிக்கப்படும்” என்றார்.

‘தி இந்து’ பதிப்பகக் குழுமத்தின் தலைவர் என்.ராம், சிறப்பு விருந்தினரான வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் முகுந்த் பத்மநாபன் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். “தொடர்ந்து பரப்பப்படும் பொய்களையும் ஏமாற்று உரைகளையும் பேனா முனைதான் உடைக்கிறது” என்று ராஜ்மோகன் காந்தி குறிப் பிட்டார்.

‘இந்தியாவின் மாறும் முகம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவின் முதல் அமர்வில் ராஜ்மோகன் காந்தி, குர்மெஹர் கவுர், அருண் குமார் ஆகியோர் ‘தி இந்து‘ சோஷியல் அஃபேர்ஸ் எடிட்டர் ஜி. சம்பத்துடன் உரையாடினார்கள். “நாடு ஏராளமான மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், பொருளாதாரம் முன்னேறவில்லை” என்று குறிப்பிட்டார் ராஜ்மோகன் காந்தி.

எழுத்தாளர்கள் மட்டுமல்லாது, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். முதல் நாள் அமர்வுகளில் தஸ்லிமா நஸ் ரீன், கரண் ஜோஹர், கே. ஸ்ரீகாந்த், ராஜ்தீப் சர்தேசாய், அனன்யா வாஜ்பேயி, மனு ஜோசப், வாஸந்தி, சாகரிகா கோஸ், சுஹாசினி ஹைதர், விஷால் பரத்வாஜ், சீதாராம் யெச்சூரி, ஜீத் தையில் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x