Published : 28 Oct 2023 06:20 AM
Last Updated : 28 Oct 2023 06:20 AM

ப்ரீமியம்
நூல் வெளி: காலத்தைத் தின்ற காதல் கதைகள்

தமிழகக் காதல் கதைகள்தேர்வும் தொகுப்பும்: ந.முருகேசபாண்டியன்டிஸ்கவரி புக் பேலஸ்கே.கே.நகர், சென்னை - 600 078தொடர்புக்கு: 87545 07070விலை: ரூ.350

எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன் ‘தமிழகக் காதல் கதைகள்’, ‘உலகக் காதல் கதைகள்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை இவ்வாண்டு கொண்டு வந்திருக்கிறார். ஓர் உணர்வை மையப்படுத்தும் சிறுகதைகளை ஒருசேர வாசிக்கும்போது, அதன் உள்மடிப்புகளை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. காதல் காலந்தோறும் கடந்துவந்த பாதையை இந்தத் தொகுப்புகளைக் கொண்டு அவதானித்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு எழுத்தாளரும் காதலை எப்படி அணுகியிருக்கிறார்கள்; காலம் காதலுக்குள் என்னவாகச் செயல்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இத்தொகுப்புகள் உதவக்கூடும்.

கு.அழகிரிசாமி முதல் மித்ரா அழகுவேல் வரையிலான எழுத்தாளர்கள் இருபத்தொன்பது பேரின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இன்று, ‘காதல்’ என்ற சொல் மட்டும்தான் காதலைக் குறிக்கிறது. ‘காமம்’ என்ற சொல் புலன் சார்ந்த இன்பத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. காமத்தை மத நிறுவனங்கள் தனித்தனியான பொருளில் கையாள்கின்றன. புணர்ச்சி இன்பம், பாலின்ப விருப்பம் என்று இச்சொல்லுக்கு அகராதிகள் பொருள் கூறுகின்றன. எனவே, இன்று காதலும் காமமும் ஒன்றில்லை. காதல் என்ற சொல்லையே பொது இடங்களில் இயல்பாகப் பயன்படுத்த முடியாத சூழலே இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x