Published : 18 May 2023 11:00 AM
Last Updated : 18 May 2023 11:00 AM

7 நாட்களில் ஏழு உலக அதிசயங்களைப் பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்த மனிதர்!

ஜேமி மெக்டொனால்ட் | படம்: ட்விட்டர்

லண்டன்: உலகின் ஏழு அதிசயங்களையும் வெறும் 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் பார்வையிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் ஜேமி மெக்டொனால்ட் எனும் நபர். ‘அட்வஞ்சர் மேன்’ எனவும் இவர் அறியப்படுகிறார். இதற்காக சுமார் 36,780 கிலோ மீட்டர் தூரம் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் நான்கு கண்டங்கள், 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 ரயில்கள் மற்றும் டோபோகன் ஒன்றிலும் அவர் பயணம் செய்துள்ளார்.

வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக தனித்துவ செயல்களை செய்வதில் சிலர் மட்டுமே கவனம் செலுத்துவர். அவர்களில் ஒருவர் தான் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேமி மெக்டொனால்ட். சீன பெருஞ்சுவர், தாஜ்மஹால், பெட்ரா, கொலோசியம், கிறிஸ்ட் தி ரெடிமர், மச்சு பிச்சு மற்றும் சிச்செனிட்சா இட்சா என உலகின் 7 அதிசயங்களையும் அவர் இந்த பயணத்தில் பார்வையிட்டுள்ளார். இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அவர் செய்துள்ளார்.

சீனா, இந்தியா, ஜோர்டான், இத்தாலி, பிரேசில், பெரு, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அவரது பயணத்தை ட்ரேவல் போர்ட் எனும் நிறுவனம் கவனித்துக் கொண்டுள்ளது. இந்த பயணத்தின் மூலம் ‘சூப்பர்ஹீரோ’ எனும் தொண்டு நிறுவனத்திற்கு அவர் நிதியும் திரட்டியுள்ளார். இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு அவர் உதவி வருவதாக தெரிகிறது.

சுமார் 9 ஆண்டுகாலம் அவர் ‘Syringomyelia’ என்ற அரிய முதுகெலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அந்த நேரத்தில் உதவிய மருத்துவமனைகளுக்கு உதவும் நோக்கில் அவர் நிதி திரட்டி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x