Published : 02 May 2023 11:58 PM
Last Updated : 02 May 2023 11:58 PM
கொச்சி: கடந்த மாதம் 25-ம் தேதிதான் நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவை கேரளாவின் கொச்சி நகரில் தொடங்கப்பட்டது. இந்த சூழலில் கொச்சி மெட்ரோ ரயில் ஊழியர்கள் இருவர் 'மைனரு வேட்டி கட்டி' பாடலுக்கு நடனமாடும் அசத்தல் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் ரயிலுக்கு முன்பாக ஆண் மற்றும் பெண் என அந்த ஊழியர்கள் இருவரும் சில நொடிகள் தங்களது நேர்த்தியான நடன அசைவுகள் மூலம் கவனம் ஈர்க்கின்றனர். சில நொடிகள் இருவரும் அந்த வீடியோவில் நடனம் ஆடுகின்றனர். அதன் பின்னர் ரயில் பயன் கட்டணம் சார்ந்த அறிவிப்பு ஒன்று அதில் டிஸ்ப்ளே ஆகிறது.
ஊழியர்கள் இருவரது எனர்ஜியும் அபாரம் என அந்த வீடியோவுக்கு சமூக வலைதள பயனர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் நடனமாடிய அந்தப் பாடல் நடிகர் நானியின் ‘தசரா’ படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT