Published : 01 May 2023 04:10 AM
Last Updated : 01 May 2023 04:10 AM

கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா நாளை நடக்கிறது; உளுந்தூர்பேட்டை, விழுப்புரத்தில் இன்று மிஸ் கூவாகம் போட்டி

விருத்தாசலம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி இன்று உளுந்தூர்பேட்டை, விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியும், நாளை கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகளுக்கான தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலிகொடுப்பதை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைப் பெருவிழா நடைபெறு வது வழக்கம். இதில் திருநங்கை களுக்குமணமுடித்தல், தேரோட் டம், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து திருநங்கைகள் திரளாக கலந்து கொள்வது இதன் சிறப்பு.

இந்த ஆண்டுக்கான சித்திரைப் பெருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியைஇந்த ஆண்டு உளுந்தூர்பேட் டையிலும் நடத்தத் திட்டமிடப் பட்டது. அதன்படி இன்று காலை 2 சுற்றுப் போட்டிகள் உளுந்தூர்பேட்டையிலும், மாலையில் இறுதிச்சுற்று போட்டி விழுப்புரத் திலும் நடைபெறும் என்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் அருணா தெரிவித்தார்.

இதற்கிடையில் சென்னையைச் சேர்ந்த திருநங்கைகளுக்கான அமைப்பு சார்பில் நேற்று விழுப்புரத்தில் அழகிப்போட்டி நடைபெற்றது. இதை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நாளை திருநங்கைகள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல் (தாலி கட்டும் நிகழ்ச்சி), மே 3-ம் தேதி காலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

அன்று மாலை பந்தலடியில் பாரதம் படைத்தலும், இரவு காளி கோயிலில் உயிர் பெறுதலும் நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக தமிழ கம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் 20 ஆயிரத்துக்கும்மேற்பட்ட திருநங் கைகள் கூவாகத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயில் நிர்வாகம் அலட்சியம்: இது தொடர்பாக திருநங்கை சுபிக்ஷா என்பவர் கூறுகையில், “திருநங்கைகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச் சியின்போது தாங்கள் அணிந்திருந்த திருமாங்கல்யத்தில் இருந்த நகையை கோயிலுக்குச் செலுத்துவோம். 1 கிராம் முதல் 1 பவுன் வரை செலுத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகளாக இது போன்று நாங்கள் செலுத்தியும், எங்களுக்கு திருவிழா காலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் இருப்பது வருத்த மளிக்கிறது. மேலும் திருவிழா காலத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்” என்றார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியர் ஷ்ரவன்குமார், எஸ்பி மோகன்ராஜ் ஆகியோர் அண்மையில் கூவாகம் கூத்தாண் டவர் கோயில் பகுதிக்குச் சென்று, திருவிழா முன்னேற்பாடுகள், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். மாவட்ட நிர்வாகம் திருவிழா வுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துதரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x