Published : 18 Apr 2023 06:07 AM
Last Updated : 18 Apr 2023 06:07 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் பயன்பெற 600 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் கடந்த டிச.15-ல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் நூலகத்துக்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு வீடு தேடிச் சென்று நூல்களை வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கின்றனர்.
ஒரு நூலகத்துக்கு 5 பேர் வீதம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 72 நூலகங்களுக்கு 360 பேர் நூலக நண்பர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற இதுவரை 600 பேர் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை புத்தகங்களை நூலக நண்பர்கள் வழங்கி வருகின்றனர்.
சிறைக்கு புத்தகம்: இது தவிர, நிலக்கோட்டை மகளிர் சிறையில் உள்ள கைதிகளிடையே புத்தக வாசிப்பை மேம்படுத்த சிறை அதிகாரிகள் வசதி செய்துள்ளனர். சிறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்திலிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT