Published : 28 Feb 2023 08:45 PM
Last Updated : 28 Feb 2023 08:45 PM
பெங்களூரு: ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்கின் படத்தை வைத்து பெங்களூரு நகரில் ஆடவர்கள் சிலர் வழிபாடு செய்துள்ளனர். கடவுளை வணங்குவதை போலவே ஆரத்தியும் காட்டியுள்ளனர். மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுதான் இதற்கு காரணம் என தெரிகிறது.
பெங்களூருவில் உள்ள ப்ரீடம் பூங்காவில் இந்த வழிபாடு நடந்துள்ளது. மஸ்க், ட்விட்டர் தளத்தை வாங்கியுள்ள காரணத்தால் ஆண்களால் அடக்குமுறைக்கு எதிராக தங்கள் கருத்துகளை ட்விட்டரில் தெரிவிக்க முடிகிறது. அவர்தான் எங்களது மெய்யான குருநாதர் என தெரிவித்துள்ளனர்.
இதனை சமூக வலைதளத்திலும் அவர்கள் பகிர்ந்துள்ளது. இது பரவலான கவனத்தை பெற்றுள்ளது. கடந்த அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் மஸ்க். அது முதல் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.
SIFF members are worshipping guru @elonmusk in Bengaluru, India for purchasing Twitter and allowing men to express their views against the oppression of authorities.@realsiff pic.twitter.com/hXQcflJsKd
— Sriman NarSingh (@SigmaINMatrix) February 26, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT