Published : 21 Feb 2023 02:37 PM
Last Updated : 21 Feb 2023 02:37 PM

நிலவின் மறுபக்கமும், தொடர் தேடுதலும் - ஒரு பார்வை

நீங்கள் நிலவை பார்க்கும்போதெல்லாம் இதனை யோசனை செய்திருக்கிறீர்களா? நாம் எப்போது நிலவின் ஒருபக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பள்ளங்கள், தடயங்கள்... இவைதான் நமக்கு நிலவின் முகமாக ஆண்டாண்டு காலமாக நினைவில் இருந்து வருகிறது. சரி, நிலவின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது. நிலவின் மறுபக்கம் இருண்ட பக்கம் (அ) துருவ பக்கம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

பூமியின் துணைக்கோளான நிலவு பற்றிய செய்திகள் எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியவை. நிலவு எவ்வளவு ஆச்சரியங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறதோ அவ்வளவு மர்மங்களையும் தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது. பூமி அமைந்துள்ள நமது சூரியக் குடும்பத்தில் சுமார் 150 நிலவுகள் உள்ளன. அந்த வகையில் நமது பூமியின் துணைகோளான நிலவைப் பற்றி அறிவது நிச்சயம் அவசியமாகிறது. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் சுமார் 100 பில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படாத பள்ளங்களும், குகைகளும் இருக்கின்றன. இப்பகுதி குறித்துத்தான் விஞ்ஞானிகள் எப்போதும் விவாதித்து வருகின்றனர்.

ஏன் இந்த விவாதம் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஆழமான காரணம் இருக்கிறது. நிலவின் அந்த இருள் பக்கத்தை ஆராய்ச்சி செய்தால், சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும். மேலும், அங்குள்ள பள்ளங்களில் உறைநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், அதிக ஆற்றல் வாய்ந்த ஹீலியம், ஹைட்ரஜன், மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

நாம் பார்க்கும் நிலவின் பக்கம்

இதனால், சமீப காலமாக மிகவும் இருள் நிறைந்த நிலவின் தென் துருவம் விஞ்ஞானிகளிடமும், உலக நாடுகளிடமும் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. மேலும், அந்த துருவப் பகுதியை அடைவதற்காக அமெரிக்கா, சீனா ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன. இந்தப் போட்டிகளுக்கு இடையேதான் நிலவின் துருவப் பகுதி குறித்த படத்தை 1959-ஆம் ஆண்டு ரஷ்யா வெளியிட்டு உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ரஷ்யா வெளியிட்ட நிலவின் மறுபக்கம்

நாம் பார்க்கும் நிலவின் பக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது ரஷ்யா எடுத்த நிலவின் மறுபக்க புகைப்படம். நாம் பார்க்கும் நிலவின் பக்கத்தில் எரிமலை திட்டுகள் காணப்படும். ஆனால், ரஷ்யா வெளியிட்ட புகைப்படத்தில் திட்டுகள் இல்லை. இதனால், இவை போலியானவை என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. உண்மையில், ரஷ்யா எடுத்த புகைப்படம் உண்மைதானா என்ற விவாதம் இதுவரை விஞ்ஞானிகளிடம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நிலவு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுழன்று வருவதாலும், பூமியும் தன்னைதானே சுற்றி கொண்டு நீள்வட்டபாதையில் சுழன்று வருவதால்தான் நிலவின் மறுபக்கத்தை நம்மால் காணமுடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.

அடுத்தப்படியாக, 2024-ம் ஆண்டில் சீனா தென்துருவத்தில் ஓர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், நிலவு குறித்து ரஷ்யா தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், அமெரிக்காவும் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு நிலவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டிகள் வல்லரசு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

நிலவின் மறுபக்கம் எவ்வாறு இருக்கும்... அறிவியல் தொடர்ந்து அதற்கான விடையை தேடிக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x