Published : 16 Feb 2023 08:34 PM
Last Updated : 16 Feb 2023 08:34 PM

கருந்துளைகளே மர்மமான இருண்ட ஆற்றலின் ஆதாரம்: விஞ்ஞானிகள் கணிப்பு சொல்வது என்ன?

கருந்துளைகள்... இந்த பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து புதிராக இருந்து வரும் கருத்தாக்கம். ஆனால், கருந்துளைகள் மற்றுமொரு மர்மபொருள் நமது அண்டவெளியில் படர்ந்து உள்ளது. அதுதான் இருண்ட ஆற்றல் (dark energy).

1916-ம் ஆண்டிதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இந்த பிரபஞ்சத்தில் விசித்திரமான கண்ணுக்கு அகப்படாத படலம் ஒன்று உள்ளது என்றார். ஜன்ஸ்டினுக்கு முன்னே விஞ்ஞானிகள் கருந்துளை குறித்து கூறி இருக்காலாம். எனினும், ஜன்ஸ்டின் அக்காலத்தில் பிரபலமாக இருந்ததால் அவரது கருத்து பொதுவெளியில் தீவிரத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அக்கண்ணுக்கு தெரியாத பொருள் குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. 1967-ஆம் ஆண்டில் அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் அக்கண்ணுக்கு தெரியாத படலத்துக்கு கருந்துளை என்று பெயர் வைத்தார்.முதல் கருந்துளை 1971-இல் கண்டறியப்பட்டது.

ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற முக்கிய விஞ்ஞானிகள் தொடர்ந்து கருந்துளைகள் குறித்து எழுதியும், பேசியும் வந்தனர். கருந்துளைகளை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் அவை எங்கு, எதிலிருந்து வருகின்றன என்ற விளக்கம் யாராலும் இதுவரை கூறமுடியவில்லை என்பது ஏமாற்றம்தான். எனினும் அறிவியல் அதன் முயற்சியை கைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நமது பிரபஞ்சத்தில் நட்சத்திரம், சூரிய குடும்பம், விண்மீன் மண்டலம், என அனைத்தும் வெறும் 5% இடத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன. இதில் 27% கரும்பொருள்கள் (dark matters) உள்ளன.இவை ஒளியை கூட பிரதிபலிக்காத தன்மை கொண்டது. மீதமுள்ள 68% இருண்ட ஆற்றலாக (dark ennergy) உள்ளது. இதில்,பிரபஞ்த்தில் உள்ள கருந்துளைகள் இருண்ட ஆற்றலின் ஆதாரமாக இருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரம் ‘தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ்’-இல் வெளியிடப்பட்ட அறிவியல் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஹவாய் பல்கலைகழகத்தால் ஒன்பது நாடுகளில் உள்ள 17 வானியலாளர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதில் கருந்துளைகளின் வளர்ச்சியானது பிரபஞ்சத்தின் விரிவாக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற முக்கிய கருத்தாக்கத்தை முன்மொழிந்திருக்கிறது.

கருந்துளைகள் வெற்றிட ஆற்றல் (இருண்ட ஆற்றலின் வெளிப்பாடு) என்று அழைக்கப்படும் ஒன்றைக் கொண்டிருக்கலாம் என்ற கருத்து புதியதல்ல, உண்மையில் 1960-களில் கோட்பாட்டளவில் இது ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கப்பட்டது. ஆனால், அண்டவியல் இணைப்பின் விளைவாக பிரபஞ்சம் விரிவடைவதால், கருத்துளைகள் காலப்போக்கில் அளவில் அதிகரிக்கும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கருந்துளைகள் மூலம் பிரபஞ்சத்தில் உள்ள இருண்ட ஆற்றலை நாம் கணக்கிட முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றன.

விரைவான விரிவாக்கம்: நமது பிரபஞ்சம் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருவெடிப்பில் (big bang theory) தொடங்கியது என்பதை நாம் அறிவோம். இந்த வெடிப்பின் ஆற்றல் பிரபஞ்த்தை வேகமாக விரிவடையச் செய்தது. செய்து கொண்டிருக்கிறது. 1990 வரை நமக்கு ஒரு கதை கூறப்பட்டது. அது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களிலும் ஈர்ப்பு விசையின் தாக்கம் காரணமாக விரிவாக்கம் படிப்படியாக குறையும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இது உண்மையல்ல.

நாம் அனைவரும் நினைத்தது போல ஈர்ப்பு விசையால் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் குறையவில்லை, மாறாக வேகமெடுத்து வருகிறது. இது மிகவும் எதிர்பாராதது . இதனை விளக்கத்தான் விஞ்ஞானிகள் தற்போது சிரம்மப்பட்டு வருகின்றனர்.

நட்சத்திர வெடிப்புகள்: சரி, அடுத்ததாக இருண்ட ஆற்றல் என்றால் என்ன? - இது பிரபஞ்சத்தின் அடுத்த புதிர். பொதுவாக வயது முதிர்ந்த நட்சத்திரங்கள் வெடிக்கும்போதுதான் இந்தக் கருந்துளைகள் உருவாகின்றன. கருந்துளையின் ஈர்ப்பு விசை மிகவும் வலிமையானது. ஒளி கூட அதிலிருந்து தப்பிக்க முடியாது. கருந்துளையில் எல்லாமே உறிஞ்சப்படுகிறது. கருந்துளையின் மையத்தில் சிறப்பு தனித்தன்மை என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட இடத்தை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அங்கு கருந்துளையின் உட்செல்லும் பொருள் எல்லையற்ற அடர்த்தியில் ஒரு புள்ளியில் நசுக்கப்படுகிறது என்று கூறலாம். மிக அருகில் வரும் நட்சத்திரங்களை விழுங்குவதன் மூலமோ அல்லது மற்ற கருந்துளைகளுடன் இணைவதன் மூலமோ கருந்துளையின் அளவு அதிகரிக்கின்றன.

ஆனால், கடந்த காலத்திலும் சரி, இன்றைய காலத்திலும் சரி, நட்சத்திர உருவாக்கம் இல்லாத நீள்வட்ட விண்மீன் திரள்களை ஒப்பிட்டப்போது, இறந்த விண்மீன் திரள்கள் அவற்றின் எரிபொருளை முழுவதுமாகப் பயன்படுத்திவிடுகின்றன. எனவே, இந்த நேரத்தில் அதிலிருந்து உருவாகும் கருந்துளைகள் விண்மீன்களை விழுங்கும்போது அவற்றின் நிறை அதிகரிப்பது இங்கு சாத்தியமில்லை.

அதற்கு பதிலாக, இந்த கருந்துளைகள் அங்கு வெற்றிட ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும், பிரபஞ்சம் விரிவடையும்போது இந்தக் கருந்துளைகளும் விரிவடைவதாக ஹவாய் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இணைத்தல் செயல்முறைக்கு பிரபஞ்சத்தில் உள்ள இருண்ட ஆற்றல் எவ்வளவு காரணமாக உள்ளது என்பதையும் ஹவாய் விஞ்ஞானக் குழு கணக்கிட்டுள்ளது. மேலும், இருண்ட ஆற்றலைக் கணக்கிடுவதற்கு தேவைப்படும், வெற்றிட ஆற்றலை கருந்துளைகள் வழங்குவது சாத்தியமாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இது பிரபஞ்சத்தில் இருண்ட ஆற்றலின் தோற்றத்தை விளக்குவது மட்டுமல்லாமல் கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தில் அவற்றின் பங்கைப் பற்றிய நமது புரிதலை ஆழமாக மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது.

உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன் | தமிழில்: இந்து குணசேகர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x