Published : 20 Jan 2023 05:55 PM
Last Updated : 20 Jan 2023 05:55 PM
அது ஒரு காலம். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர். எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் தலைகீழாக மாறி விட்டார்கள். போதாக்குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, போர்வைக்குள் புகுந்து கொண்ட பிறகும் கைப்பேசியில் மேய்ச்சல் என்று நம்மை தூங்கவிடாத விஷயங்கள் பெருகிவிட்டன.
தூங்காத கண்கள்: எல்லாவற்றையும் விரல் நுனியில் செய்து முடித்துவிட முடியும் என்கிற நிலை இருக்கிறபோதும்கூட, நம்மில் பலருக்கும் முந்தைய நாள் தூக்கம் கண்களை அழுத்திக்கொண்டேதான் இருக்கிறது, இல்லையா? இதற்கு என்ன காரணம்? தூக்கத்தை இழப்பதால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT