Published : 04 Jan 2023 06:58 PM
Last Updated : 04 Jan 2023 06:58 PM
புது வருடமான 2023-ன் பிறப்பை உலகமே கொண்டாட்ட மனநிலையில் கொண்டாடி வரவேற்றுள்ளது. இணைய உலகில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வைரலாகின. இந்த சூழலில் தாங்கள் ஆர்டர் செய்த உணவை கொண்டு வந்த சொமேட்டோ டெலிவரி ஏஜெண்டை தங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொண்டுள்ளனர் சிலர். அது எப்படி நடந்து என பார்ப்போம்.
கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு 11 மணி அளவில் கிஷான் ஸ்ரீவட்ஸா எனும் நபர் மற்றும் அவரது நண்பர்கள் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளனர். அதனை அந்த டெலிவரி ஏஜெண்ட் சுமார் 12 மணி அளவில் கொண்டு வந்துள்ளார்.
அதன் பின்னர் தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கிஷான் மற்றும் அவரது நண்பர்கள் டெலிவரி ஏஜெண்டை சேர்த்துக் கொண்டுள்ளனர். “எதிர்பாராத நபர்கள் இடமிருத்து கிடைத்த எதிர்பாராத மகிழ்ச்சி” என கிஷான் ட்வீட் செய்துள்ளார். அந்த டெலிவரி ஏஜெண்டும் வாடிக்கையாளர்களின் பேச்சை தட்டாமல் அதில் பங்கேற்றுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரி செய்யும் ஏஜெண்ட்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் குறித்து நாம் இதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் நாம் அறிந்திருப்போம். இந்தச் சூழலில் கிஷான் மற்றும் அவரது நண்பர்களின் செயல் பாராட்டுக்குரியதே!
@zomato @zomatocare @ZomatoProHelp
We ordered food at last minute around 11:00 PM something in zomato and it reached around exact 12:00 AM so we celebrated new year with the zomato delivery partner.
Unexpected happiness from Unexpected people #zomato #HappyNewYear #deliveryguy pic.twitter.com/J1Hv9JwCUy— Kishan Srivatsa (@SrivatsaKishan) December 31, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT