1888-ல் ஸ்டேன்ஸ் நூற்பாலை கோவையில் உருவானது. நரசிம்மலு நாயுடுவின் தோட்டத்தில் ராபர்ட் ஸ்டேன்ஸ் துரை கட்டினார்.
1910-ல் லட்சுமி மில் உருவானது. பின் 2,000-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் தொடங்கப்பட்டு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவை அழைக்கப்பட தொடங்கியது.
1910-ல் வெரைட்டி ஹால் சாலையில் டிலைட் சினிமா தியேட்டரை வின்சென்ட் கட்டி முடித்தார்.
1937-ல் சென்ட்ரல் ஸ்டூடியோ கட்டப்பட்டது. 1912-ல் திருச்சி சாலை அமைக்கப்பட்டது.
1945-46-ல் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிங்காநல்லூர் பகுதியில் அண்ணாசாமி பிள்ளை என்பவரது வீட்டில் குடியிருந்தார். 1948-ல் வெளிவந்த அபிமன்யு சினிமாவுக்கு கருணாநிதி கோவையில் தான் கதை, வசனம் எழுதினார். | லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமலு நாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட இடம் சென்ட்ரல் ஸ்டூடியோ வளாகம். | சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ஜி.டி.நாயுடு தலைமையில் பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் அதே சென்ட்ரல் ஸ்டூடியோ வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1852-ல் கோவை அரசு கலைக் கல்லூரி உதயமானது.
1921-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி சிங்காநல்லூர் பகுதிக்கு வந்த மகாத்மா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1972-ல் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த கட்டைவண்டி போராட்டம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
WRITE A COMMENT