Published : 04 Nov 2022 03:41 PM
Last Updated : 04 Nov 2022 03:41 PM
பெங்களூரு: உலகின் மிகப் பெரிய காபி செயின் வணிக நிறுவனமாக அறியப்படுகிறது ஸ்டார்பக்ஸ். இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் செவ் சீகல், பெங்களூரு நகரில் உள்ள வித்யார்தி பவனில் மசாலா தோசையும், ஃபில்டர் காபியும் ருசித்துள்ளார். அதோடு அதற்கு தனது மதிப்பீட்டையும் வழங்கி உள்ளார் அவர். இதனை அந்த உணவகம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.
கடந்த 1943 வாக்கில் தொடங்கப்பட்ட வித்யார்த்தி பவன் உணவகம், வெற்றிகரமாக 79 ஆண்டுகளாக அந்த நகரில் இயங்கி வருகிறது. இந்த உணவகம் பெங்களூரு நகரில் பிரபல உணவகமாக அறியப்படுகிறது. பாரம்பரியமிக்க தென்னிந்திய சைவ முறை உணவுகளை வழங்கி வரும் உணவகம் இது. இங்குதான் செவ் சீகல் வருகை தந்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மீட்டுக்கு வந்துள்ளார் அமெரிக்க தொழிலதிபரான சீகல். நேற்று மாலை அவர் இந்த உணவகத்திற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு மசாலா தோசை மற்றும் ஃபில்டர் காபி பரிமாறப்பட்டுள்ளது. கடந்த 1971 வாக்கில் நிறுவப்பட்ட ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர் அவர். அந்நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் இயக்குனராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.
“நண்பரே, உங்களது ஃபேமஸான உணவு, காபி மற்றும் அன்பான உபசரிப்பை பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். அற்புதமான இந்த அனுபவத்தை என்னோடு சியாட்டலுக்கு கொண்டு செல்ல உள்ளேன். நன்றி” என சீகல் தெரிவித்துள்ளார். அதோடு மூன்று ஸ்டாரும் கொடுத்துள்ளார். அவரது வருகை குறித்து அறிந்த அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது அபரிமிதமான அன்பை சமூக வலைதள பதிவுகளின் வழியே தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT