Last Updated : 03 Nov, 2022 07:06 PM

 

Published : 03 Nov 2022 07:06 PM
Last Updated : 03 Nov 2022 07:06 PM

நவீனக் கால, தமிழ்நாட்டைப் பிரதிபலிக்கும் 'ஹைவே ட்ரீம்ஸ்’!

சாலைகள் வழியாகப் பயணிப்பதே எந்தவொரு இடத்தின் அழகையும் ஆழமாக ரசித்து அனுபவிக்கச் சிறந்த வழி. இந்தியாவின் பெரிய புவியியல் நிலப்பரப்பும் சர்வதேச தரத்தில் நன்கு இணைக்கப்பட்டு இருக்கும் நெடுஞ்சாலைகளும் புதிய, வேறுபட்ட கோணத்தில் நாட்டை கண்டு உணரும் வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியக் கிராமப்புறங்களில் வாகனம் ஓட்டுவது, சாலைப் பயணங்கள் மேற்கொள்வது எனப் புதிய பயண வாய்ப்புகளுக்கான இடங்களை உருவாக்குவது மிகவும் சவாலாக உள்ளது. இந்தச் சூழலில், நவீன உலகத்துடன் தடையின்றி இணைந்த பாரம்பரிய உலகத்தின் பார்வையை வழங்கும் அறியப்படாத / ஆராயப்படாத இடங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.

புதுமையான தொடர்

தமிழ்நாட்டின் கலாச்சாரம் பேர்பெற்றது. சுற்றுலாத் தலங்களும் இங்கு அதிகம். தரமான சாலை வசதி உள்ளதால், தமிழ்நாடு பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாகத் திகழ்கிறது. இத்தகைய ஒரு சாலைப் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் விதமாக ‘ஹைவே ட்ரீம்ஸ்’ எனும் நிகழ்ச்சியை நெக்ஸா ஜர்னிஸ் வடிவமைத்து உள்ளது. 10 தொடர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியைக் கடந்த அக்டோபர் 30 முதல் Zee Zest ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. பிரபல உணவுப் பயணம் சார்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பாடகருமான ராகேஷ் ரகுநாதன் இதனைத் தொகுத்து வழங்குகிறார்.

யார் இந்த ராகேஷ்?

ராகேஷ் ரகுநாதன் பயணங்கள் மீது மிகுந்த ஆர்வமுள்ளவர்; பாரம்பரிய சமையல் குறிப்புகளை ஆராய்ச்சி செய்தல், ஆவணப்படுத்துதல், ஆகியவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுவருபவர். இந்த நிகழ்ச்சியை ராகேஷ் தொகுத்து அளிக்கும் விதம், அவருடன் இணைந்து நெடுஞ்சாலைகளில் பயணித்து, அந்தப் பகுதியின் மிகச்சிறந்த உணவு வகைகளை நாமும் ஆராய்வது போன்ற அனுபவத்தை அளிக்கிறது.

நிகழ்ச்சியின் நோக்கம்

புதிய தலைமுறை அனுபவங்கள், நவீன வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் இந்த நிகழ்ச்சி இந்தியாவை அதன் வழக்கமான பயண இடங்களுக்கு அப்பால் காட்சிப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து Zee Zest நிறுவனத்தின் அமித்ஷா கூறும்போது “பார்வையாளர்களுக்கு இந்தியாவின் வாழ்க்கை முறையைச் சர்வதேசத் தரத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக அறிமுகப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். முக்கியமாக, NEXA உடன் இணைந்து, தமிழகத்தின் தென் மாநிலத்தை ஆராய்ந்து, கண்டறியும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஓர் அற்புதமான அனுபவத்தை அளிக்கும்” என்று தெரிவித்தார்.

அலாதியான அனுபவம்

சென்னையிலிருந்து பயணத்தைத் தொடங்கிய ராகேஷ் கோயம்புத்தூர் நோக்கிச் சென்றார். வழியில் விண்டேஜ் கார் ஆர்வலருடன் ‘கீடீ கார் அருங்காட்சியக'த்தைச் சென்றதுடன், அதை நமக்கும் அறிமுகப்படுத்தினார். கோயம்புத்தூரில் உள்ள கார் ஓட்டும் பந்தயப் பாதையில் பயணித்த அவர், நீலகிரி மலைப்பாதையின் வழியாக ஊட்டிக்குச் சென்றார். ஊட்டியில் அவர் மிகப்பெரிய நகரும் தொலைநோக்கிகளில் ஒன்றைக் கண்டு ரசித்தார். ஊட்டியில் உள்ள பிரிட்டிஷ் பாணி விண்டேஜ் ஹாட்ஸ்பாட் கேன்டர்பரி பாரில் இரவு உணவோடு ராகேஷின் அன்றைய நாள் முடிவடைந்தது.

இந்தியாவிலேயே கொடைக்கானல் பகுதி தான் அவகோடோ பயிரிடுவதில் முன்னணியில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் அமைதியான நிலப்பரப்பு வழியாகக் கொடைக்கானலுக்குச் செல்லும் போது, அங்கே மறைந்திருக்கும் அவகோடா பண்ணைக்கு நம்மை ராகேஷ் அழைத்துச் செல்கிறார். பின்னர் கொடைக்கானலில் உள்ள ஒரு பண்ணையில் பழங்குடியின மக்களின் சமையலை நேரடி செயல் விளக்கத்துடன் அவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். Zee Zest , Zee Zest HD ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் நெடுஞ்சாலைகள் வழியாகப் பயணிக்கும் இந்தத் தொடர் நமக்கு ஓர் அலாதியான அனுபவத்தை அளிக்கிறது.

Zee Zest, Zee Tamil SD & HD ஆகியவற்றில் ’ஹைவே ட்ரீம்ஸ்’ நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம்.

YouTube இணைப்பு:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x