Published : 02 Nov 2022 08:53 PM Last Updated : 02 Nov 2022 08:53 PM
ரயில்களில் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்வது எப்படி? - முழு வழிகாட்டுதல்
சென்னை: ரயில்களில் வளர்ப்பு நாய்களை கொண்டு எந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிகள் தங்களுடன் தங்களது வளர்ச்சி நாய்களைக் கொண்டு செல்ல என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதன் விவரம்:
வளர்ப்பு நாய்களை தங்களுடன் கொண்டு செல்ல
ஏசி முதல் வகுப்பில் இரண்டு இருக்கை கொண்ட Coupe அல்லது 4 இருக்கை கொண்ட Cabin புக் செய்ய வேண்டும்.
ஒரு பயணி ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே தங்களுடன் கொண்டு செல்ல முடியும்.
பயணம் தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக பார்சல் அலுவலகத்திற்கு அழைத்து வர வேண்டும்.
எந்த நோயும் இல்லை என்று 24 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பாக கால் நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கால் நடை மருத்துவரின் சான்றிதழை பார்சல் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
பார்சல் கட்டண விதிகளின் படி வளர்ப்பு நாய்களை கொண்டு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏசி முதல் வகுப்பை தவிர்த்து மற்ற வகுப்புகளில் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
உரிய அனுமதி பெறாமல் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்லும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பயணத்தின் போது நாய்களுக்கான உணவை பயணிகள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
கூடைகளில் குட்டி நாய்களை கொண்டு செல்ல
அனைத்து வகுப்புகளிலும் குட்டி நாய்களை கூடையில் வைத்து கொண்டு செல்லலாம்.
குட்டி நாய்க்கு மருத்துவர் அளித்த சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றை புக் செய்யும்போது அளிக்க வேண்டும்.
பார்சல் கட்டண விதிகளின்படி குட்டி நாய்களை கொண்டு கட்டணம் வசூலிக்கப்படும்.
பார்சல் வேன்களில் கொண்டு செல்ல :
ரயில் மேலாளரின் கண்காணிப்பில் பார்சல் வேன்களில் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்லலாம்.
நாய் பெட்டியில் வைத்து நாய்களை இந்த பார்சல் வேன்களில் கொண்டு செல்ல முடியும்.
நாயை கொண்டு செல்ல விரும்பும் பயணியின் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டாக இருக்க வேண்டும்.
பயணம் தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு நாயை ரயில்வே பார்சல் அலுவலகத்திற்கு அழைத்து வர வேண்டும்.
பார்சல் கட்டண விதிகளின் படி கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கட்டண பில்லை பயணம் தொடங்கும் முன்பு ரயில் மேலாளாரிடம் அளிக்க வேண்டும்.
நாயின் வாய் முறையாக கட்டி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எந்த நோயும் இல்லை என்று 24 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பாக கால்நடை மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
WRITE A COMMENT