Published : 20 Sep 2022 08:25 PM
Last Updated : 20 Sep 2022 08:25 PM

“மென்பொருள் பொறியாளர்கள் வேண்டாம்” - கவனம் ஈர்க்கும் மணமகன் தேவை வரி விளம்பரம்

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி: மணமகன் தேவை என குறிப்பிடப்பட்டுள்ள வரி விளம்பரம் ஒன்றில் தயை கூர்ந்து மென்பொருள் பொறியாளர்கள் போன் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் இணையவெளியில் உலவிக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகிற்கு ஏற்ற வகையில் திருமணத்திற்கான வரன் தேடும் படலம் மாற்றம் கண்டுள்ளது. மேட்ரிமோனி நிறுவனங்கள் கூட டிஜிட்டல் வகையில் உருமாறி உள்ளன. இத்தகைய சூழலில் நாளேடு ஒன்றில் வெளியான ‘மணமகன் தேவை’ என்ற வரி விளம்பரம் வைரலாகி உள்ளது. அதற்குக் காரணம் அந்த விளம்பரத்தின் உள்ளடக்கம் தான்.

அப்படி அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது? தொழில் பின்புலம் கொண்ட அழகான பெண் ஒருவருக்கு அதே வகுப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ், மருத்துவர், தொழிலதிபர் அல்லது தொழில் முனைவோர் போன்ற பின்புலம் கொண்ட மணமகன் தேவை. தயை கூர்ந்து மென்பொருள் பொறியாளர்கள் தொலைபேசியில் அழைக்க வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை கவனித்த தொழிலதிபர் அரோரா அந்த விளம்பரத்தை அப்படியே படம் பிடித்து, பொறியாளர் குறித்த கருத்தை மட்டும் சிவப்பு நிற கட்டத்தில் ஹைலைட் செய்துள்ளார். இதையடுத்தே அது கவனம் பெற்றுள்ளது. ‘ஐடி துறையின் எதிர்காலம் பிரகாசமானதாக இல்லை’ என அவர் அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

இதுதான் இப்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இதனை பகிர்ந்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x