Published : 26 Aug 2022 02:30 PM
Last Updated : 26 Aug 2022 02:30 PM
அல்பேனியாவைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க அருட்தொண்டரான அன்னை தெரசா 1910-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். குடியுரிமை பெற்று தன் வாழ்நாளின் பெரும் பகுதியினை இந்தியாவில் கழித்தார். கொல்கத்தாவில் கத்தோலிக்க சமய சபையை நிறுவி, ஏழை எளியோர், நோய்வாய்ப்பட்டோர், ஆதரவற்றோர்களுக்கு நாற்பது வருடங்களுக்கும் மேலாக தொண்டாற்றியுள்ளார். மிகச் சிறந்த சமூக சேவகராக உலகம் முழுவதும் புகழப்பட்டவர்.
அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா உட்பட பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளையும், இந்தியா மற்றும் பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார். அருங்காட்சியகம், கல்வி நிறுவனம், சாலை என பல்வேறு இடங்களுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பின்பற்றத்தக்க எத்தனையோ கருத்துகளை அவர் உதிர்த்திருக்கிறார். அவற்றில் 10 மேற்கோள்கள் இங்கே...
| ஆக.26 - இன்று அன்னை தெரசா பிறந்த தினம் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT