Published : 06 Aug 2022 01:58 PM
Last Updated : 06 Aug 2022 01:58 PM

பாலூட்டும் காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்: மருத்துவர் வழிகாட்டுதல்

புதிதாகப் பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்திற்குத் தாயின் பாலையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. பிறந்த முதல் ஆறு மாத காலம் குழந்தையின் ஊட்டச்சத்திற்கான முதன்மை ஆதாரமாகத் தாய்ப்பாலே இருக்கிறது. எனவே, தாய்ப்பாலூட்டும்போது தனது உடலுக்குள் செல்கின்ற ஊட்டச்சத்துகளின் மீது முழுக் கவனம் செலுத்துவது ஒரு தாயின் முக்கியமான கடமை.

தாய்ப்பாலூட்டும் அன்னையர்கள் புரத உணவை உட்கொள்வது முக்கியமானது. ஏனெனில், போதுமான அளவு புரதச்சத்தை உட்கொள்வது அத்தியாவசியமாக இருக்கின்ற ஒரு முக்கியமான காலமாகத் தாய்ப்பால் ஊட்டும் காலம் இருக்கிறது.

கோழிக்கறி (சிக்கன்): தாய்ப்பாலூட்டும் அன்னையருக்கு அதிகப் பயனுள்ளதாக இருக்கின்ற புரதம் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கோழிக்கறி கொண்டிருக்கிறது.

முட்டை: வைட்டமின் டியின் ஒரு முக்கியமான ஆதாரமாக முட்டை திகழ்கிறது. இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பச்சிளம் குழந்தையின் உடல் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு உதவுகின்றன; அதன் எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்துகின்றன. பிரசவித்திருக்கும் தாயின் உணவுத் தொகுப்பில் முட்டை அத்தியாவசியம் இடம்பெற வேண்டும்.

டாக்டர் கீதா ஹரிப்பிரியா

அவகாடோ (வெண்ணெய் பழம்): பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவைப் படும் கூடுதல் ஆற்றலை வழங்குகின்ற ‘ஆரோக்கியமான கொழுப்பு’ அவகாடோவில் இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகளுக்கும் செல் உருவாக்கத்திற்கு அவசியமான அமினோ அமிலங்களின் சிறப்பான ஆதாரமாகவும் அவகாடோ இருப்பது இதன் தனிச்சிறப்பு.

சியா விதைகள்: கால்சியம், புரதம், நார்ச்சத்து, மக்னீசியம் அதிகளவில் சியா விதைகளில் இருக்கின்றன. ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களையும் அதிக அளவில் இவை வழங்குகின்றன.

சால்மன் மீன்: பாலூட்டும் தாய்மார்களுக்கு சால்மன் மீன் ஒரு மிகச்சிறந்த உணவு. ஓர் உயர்தரப் புரத ஆதாரமாக இது இருப்பதோடு, ஒமேகா – 3 கொழுப்பு அமில டி.எச்.ஏ.வின் மிகச்சிறந்த ஆதார உணவுகளுள் ஒன்றாகவும் சால்மன் திகழ்கிறது.

ஊட்டச்சத்துகள் அவசியம்: உடல்நலத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி, மார்பகத்தில் பால் சுரப்பையும் ஊட்டச் சத்துக்கள் ஊக்குவிக்கின்றன. குழந்தையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இது அத்தியாவசியமானது.

> இது, ஆக.1 – 7 உலகத் தாய்ப்பால் வாரத்தை ஒட்டி மகப்பேறியல், மகளிர் நோயியல் நிபுணர் டாக்டர் கீதா ஹரிப்பிரியா எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x