Published : 29 Jul 2022 10:58 PM
Last Updated : 29 Jul 2022 10:58 PM

கர்நாடகாவில் விநோதம்: மணமக்கள் இறந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த திருமணச் சடங்கு

பெங்களூரு: மணமக்கள் இறந்து 30 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் தக்ஷன கன்னடா மாவட்டத்தில் வியாழக்கிழமை, ஷோபாவுக்கும், சந்தப்பாவுக்கும் நடந்த அந்த திருமண நிகழ்வு வழக்கமான திருமணத்தில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. காரணம் மணமக்கள் இருவரும் இறந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு இந்த திருமணம் நடந்துள்ளது.

நம்புங்கள். கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளில் சில சமூக மக்களிடம் இன்றும் இந்த பாரம்பரிய வழக்கம் உள்ளது. இந்த திருமணத்திற்கு பெயர் பிரேத கல்யாணம். பிறக்கும் போது இறந்த குழந்தைகளுக்காக இந்த திருமண நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆன்மாகளை கவுரவப்படுத்துவதாக அந்த மக்கள் நம்புகின்றனர்.

அன்னி அருண் என்ற யூடியூபர் சிறுவயதில் இறந்த ஷோபாவுக்கும், சாந்தப்பாவுக்கும் நடந்த பிரேத கல்யாணத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளாக பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: "இன்று நான் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன். இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்கலாம். திருமணம் நடக்கும் பெண் இறந்து விட்டார். மாப்பிள்ளையும் இறந்து போனவர்தான். 30 வருடங்களுக்கு முன்பு இறந்து போனவர்களுக்கு இப்போது திருமணம் நடந்தது.

இங்கு இது தீவிரமாக பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியம். பிறக்கும் போது இறந்த ஒருவருக்கு அவரைப்போலவே பிறக்கும் போது இறந்த இன்னெருவாருடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. சாதாரணத் திருமணத்தைப் போலவே எல்லா சடங்குகளும் நடைபெறுகிறது. இருவீட்டாரும் நிச்சயதார்த்தம் செய்ய மற்றவர் வீட்டிற்குச் செல்கின்றனர்.

இந்த திருமண நிகழ்வில் குழந்தைகளும் திருமணமாகதவர்களும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. திருமண சடங்கு மட்டும் இல்லை விருந்தும் வழக்கம் போலவே உண்டு. இந்த திருமணத்தில், மீன் வருவல், சிக்கன் சுக்கா, கட்லி ப்லயார், மட்டன் கிரேவி மற்றும் இட்லி வழங்கப்பட்டது.

இதற்கு பின்னர் மணமக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்" என்று திருமணம் குறித்து விவரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x