Published : 05 May 2022 04:31 PM
Last Updated : 05 May 2022 04:31 PM
கோடை வெயிலைச் சமாளிக்க நாம் படாதபாடுபடுகிறோம். உடனே ஏ.சி. வாங்கலாம் என நினைப்போம். சிலர் “அது எதற்கு? ஏர் கூலர் வாங்கலாமே, விலையும் குறைவு, பராமரிப்பதும் எளிது” என்பார்கள். நமக்கும் குழப்பம் வரும்.
ஏர் கூலர்: ப்ளஸ் என்ன? - எளிமையான தொழில்நுட்பத்தில் வேலை செய்யக்கூடியது. வெயில் காலத்தில் ஜன்னல்களில் ஈரத் துணியை நனைத்து இடுவது நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வதுதான். கிட்டதட்ட அதே மாதிரியான ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் ஏர் கூலர் வேலைசெய்கிறது.
எக்ஸாஸ்ட் ஃபேன் எப்படி அறைக்குள் உள்ள காற்றை எப்படி வெளியே தள்ளிவிடுகிறதோ அதே மாதிரி வெளிக்காற்றை உள்ளே இழுத்துக் குளிர்விக்கிறது ஏர் கூலர்.
பாதகங்கள்: ஏர் கூலர் வேலை செய்வதற்கு அதற்குள் தண்ணீர் நிரப்பிவைப்பது அவசியம். இதனால் இதை அடிக்கடிச் சுத்தமாக்க வேண்டும். இல்லையெனில் இதில் கிருமிகள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. சுத்தமாக்காமல் பயன்படுத்தும்போது அது ஆரோக்கியத்துக்குத் தீங்கு நேரும்.
ஏர் கூலர், காற்றின் ஈரப்பதத்தின் அடிப்படையில் வேலைசெய்யக் கூடியது. காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் ஏர் கூலரின் செயல்பாடு உடல் நலத்துக்குத் தீங்காகும்.
ஏசி: ப்ளஸ் என்ன? - எல்லா விதமான ஊர்களுக்கும் ஏற்றவை. ஈரப்பத சதவீதம் அதிகமாக உள்ள ஊர்களுக்கும் குறைவாக உள்ள ஊர்களுக்கும் ஏற்றவை. முழுமையான குளிர்ச்சியைத் தரக்கூடியது.
ஏர் கூலரின் ஒப்பிட்டால் தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. ஏர் கூலரின் தண்ணீர் நிரப்ப வேண்டிய வேலை இருக்கிறது. ஏசியில் சுவரில் பொருத்துவதால் இட நெருக்கடி கிடையாது. ஏர் கூலர் வைப்பதற்குத் தனி இடம் வேண்டும்.
பாதகங்கள்: ஏர் கூலருடன் ஒப்பிடும்போது மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பராமரிப்புச் செலவும் ஏர் கூலருடன் ஒப்பிடும்போது அதிகம். விலை அதிகம். சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என்ற முக்கியப் பாதகம் இதற்குண்டு. அதாவது இதில் பயன்படுத்தப்படும் குளிர்பதன அமிலம் ஓசோனைப் பாதிக்கக்கூடியது.
ஆனால், இப்போது பயன்படுத்தப்படும் எச்.எஃப்.சி. அமிலம் ஓசோனைப் பாதிக்காது. மேலும் உலக வெப்பமயமாதல் புள்ளி குறைவான அமிலங்கள்தாம் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
- இது, ஆர்.ஜெயக்குமார் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT