Published : 30 Apr 2022 06:51 PM
Last Updated : 30 Apr 2022 06:51 PM
புதுடெல்லி: வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் போன்றவற்றால் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது சர்வே முடிவு ஒன்று.
பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது Ipsos ஆய்வு நிறுவனம். இந்நிறுவனம் சர்வதேச அளவில் மேற்கொண்ட சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் உலக அளவில் வசிக்கும் மக்களுக்கு பணவீக்கம் மற்றும் சமூக சமத்துவமின்மையின் காரணமாக அதிகம் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே இந்திய அளவில் பார்க்கும்போது இது வேறு விதமாக உள்ளது எனத் தெரிகிறது.
சுமார் 28 நாடுகளில் நிலவும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த கருத்தை அறிந்துகொள்ளும் விதமாக இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. 74 வயது வரை உள்ளவர்கள் இந்த சர்வேயில் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புற இந்தியர்கள் வேலையின்மை குறித்து அதிகம் கவலைப்படுவதாக சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. மேலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சிலர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஊழல் குறித்த கவலையும் உள்ளதாக சர்வே முடிவில் தெரியவந்துள்ளது என இந்தியாவின் Ipsos ஆய்வு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அமித் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT