Published : 04 Feb 2020 12:29 PM
Last Updated : 04 Feb 2020 12:29 PM
மேகன் மார்க்கலை போல முகத் தோற்றத்தை கொண்ட மிசோரி மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இருக்கிறார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகி தற்போது கனாடாவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேகன் மார்கலை போல முகம் தோற்றம் கொண்ட மிசோரி மாகாணத்தை சேர்ந்த அகிஷா லாண்ட் என்ற பெண் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸடாகிராம்
பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்புகைப்படத்தில் அவரது முகத் தோற்றம் மேகன் மார்கலை போல இருந்ததால் அவரை மேகன் என்று சிலர் தவறுதலாக நினைத்து கொண்டனர்.
இன்ஸ்டாகிராமில் அகிஷா லாண்டை பின் தொடர்புவர்களும் அவரை மேகன் மார்க்கலை போலவே உள்ளீர்கள் என்று நூற்றுக்கணக்கான கமெண்ட்களை பதிவிட்டனர்.
இந்த திடீர் புகழ் குறித்து அகிஷா லாண்ட் கூறும்போது, “ நான் பதிவிட்ட புகைப்படத்தின் கீழ் வழக்கமாக எனது மகள் குறித்துதான் அதிகம் பேர் கமெண்ட் செய்வார்கள். ஆனால் இம்முறை என்னை பற்றிய கமெண்ட்கள்தான் அதிக அளவில் உள்ளன.
இது மிகவும் வித்தியாசமானது. ” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT