Published : 28 Oct 2019 04:07 PM
Last Updated : 28 Oct 2019 04:07 PM
லண்டன்
குளிர்பானங்கள் அதிகம் குடித்தால் உடல் பருமனுக்கும் பற்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் சாயர்ஸ் ஓ’டூல் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள பிரபல கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் சாயர்ஸ் ஓ' டூல் கண்டறிந்த ஆய்வு முடிவுகளை கிளினிக்கல் ஓரல் இன்வெஸ்டிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
குளிர்பானங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிக எடை அல்லது பருமனாக இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி பல் விழுவதோடு தொடர்புடையது. கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் அமில பழச்சாறுகள் போன்ற சில பானங்களின் அமில இயல்புதான் பற்சிதைவு ஏற்பட அதிக அளவில் வழிவகுக்கிறது
பெரியவர்களிடையே உடல் பருமனுக்கும் பல் விழுதலுக்கும் இடையிலான பொதுவான காரணியாக சர்க்கரை - இனிப்பான அமில பானங்கள், குளிர்பானம் போன்றவை உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், உடற்பருமன் நோயாளிகளுக்கு பல் எனாமல் மற்றும் பல்லின் வேர்ப்பகுதி அரிப்புக்கு சர்க்கரை குளிர்பானங்களின் அதிகரித்த நுகர்வு ஒரு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
உணவு அல்லது இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள் காரணமாக பல் பல் எனாமல் மென்மையாக்கப்படுவதாலும் பராமரிப்பின்மையாலும் ஆரம்ப நிலை பற்சிதைவு ஏற்படுகிறது.
தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனைக் கணக்கெடுப்பு 2003-2004 இன் தரவுகளின்படி, அமெரிக்காவில் 3,541 நோயாளிகளின் கணக்கெடுப்பு பங்கேற்பாளர்களின் பிரதிநிதி மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பாடி மாக்ஸ் இன்டெக்ஸ் எனப்படும் அளவுக்கு அதிகமான உடல் எடை பற்சிதைகளின் நிலைகள் கணக்கிடப்பட்டன.
அப்போது இரண்டு தொடர்ச்சியான 24 - மணிநேர நினைவுகூறும் நேர்காணல்கள் மூலம் சர்க்கரை - இனிப்பு அமில பானங்கள் உட்கொள்ளல் பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் நோயாளிகள் உணவு உட்கொள்ளல் விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆய்வின் படி, அமில உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதால் பற்களின் துவாரங்கள் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படுத்தி, பல்லின் மூன்றாவது நிலையில் பற்சிதைவு ஏற்படுவது கண்டறியப்பட்டது.
இதில் பருமனான நோயாளிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட இரைப்பை ரிஃப்ளக்ஸ் நோய் (நெஞ்செரிச்சல்) அதிகரிக்கும் வாய்ப்பு போன்ற பிற ஆபத்து காரணிகளும் உள்ளதாகவும் கண்டறியப்பட்டது. அமில சர்க்கரை இனிப்பு பானங்கள் மூலம் கலோரிகளை உட்கொள்ளும் பருமனான நோயாளிகளுக்கு இது ஒரு முக்கியமான செய்தி.
சுவையாக இருக்கிறதே என அடிக்கடி அருந்தும் இந்த பானங்கள் அவர்களின் உடலுக்கும் பற்களுக்கும் அதிகம் சேதம் விளைவிக்கும்.
இவ்வாறு ஓ’டூல் தனது ஆய்வில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT