Last Updated : 12 Feb, 2019 10:32 AM

 

Published : 12 Feb 2019 10:32 AM
Last Updated : 12 Feb 2019 10:32 AM

இளமை .நெட்: காதலுக்குக் கைகொடுக்கும் செயலிகள்!

ஸ்மார்ட்போன் யுகத்தில் காதல், டிண்டர் (Tinder) மயமாகி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். டிண்டருக்கெனத் தனி மொழியும் இருக்கிறது. இந்தச் செயலியில் ஒருவரை வலப்பக்கம் ஸ்வைப் செய்தால் பிடிச்சிருக்கு எனச் சொல்வதாக அர்த்தம். இடப்பக்கம் ஸ்வைப் செய்தால், பிடிக்கவில்லை என உணர்த்துவதாகப் பொருள். பரஸ்பரம் இருவர் வலப்பக்கம் ஸ்வைப் செய்தால், சேட்டிங் பாதையில் முன்னேறலாம்.

புதுயுகச் செயலிகள் டிண்டர் தனக்கெனத் தனியிடம் பிடித்துக்கொள்ள, டிண்டருக்குப் போட்டியாகவும் பலவிதச் செயலிகள் உருவாகியி ருக்கின்றன. எல்லாம் சரி, டேட்டிங் எனப்படும் காதல் பரிசோதனை கொஞ்சம் ரிஸ்க் நிறைந்தது. இதுபோன்ற சாட்டிங், டேட்டிங் அனுபவங்கள் மோசமாகி காதலே கசந்து போகலாம். இது போன்ற சூழலில் என்ன செய்வது?

இந்தக் கேள்விக்கு, உற்சாகமாகப் பதில் அளிக்கும் வகையில் ‘பாட்டேட்டிங் ஆப்’ (http://boddatingapp.com/) உருவாகி இருக்கிறது. அது என்ன ‘பாட்’ எனக் கேட்டால், மோசமான ஆன்லைன் டேட்டிங் அனுபவத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களின் (பேட் ஆன்லைன் டேட்) சுருக்கம்தான் இது.

ஆர்வத்துடனும் எதிர் பார்ப்புடனும் டேட்டிங்கில் ஈடுபடும்போது, அந்த அனுபவம் கசப்பான அனுபவமாகி மாறும் சூழலில், கைகொடுத்து கரை சேர்க்கும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படையில், இதை டேட்டிங் குக்கான மாற்றுத் திட்டம் (பிளான் பி) என்கிறது இந்தச் செயலி.

அதாவது, எந்தத் திட்டத்தை வகுத்தாலும், அது சொதப்பினால் என்ன செய்வது எனும் முன்யோசனை யோடு மாற்றுத் திட்டமான ‘பிளான் பி’யை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை.

இந்தக் கருத்தாக் கத்தைத்தான், மேலே சொன்ன செயலி கொண்டு வந்திருக்கிறது. டேட்டிங்கில் ஈடுபட்டிருக்கும் போது, கசக்கத் தொடங்கினால், சோக கீதம் பாடி, புலம்பிக்கொண்டிருக்காமல், இந்தச் செயலி வாயிலாகவே, புதிய ஜோடியை முயன்று பார்க்கலாம். இதுதான் பிளான் பி-யாம். இதுதான் ‘பாட்’ செயலியின் சிறப்பம்சம்.

டேட்டிங் செயலிகளில் இன்னொரு புதுமை என இதை வர்ணிக்கிறார்கள். இதேபோல ‘டேட் எஸ்கேப்’ (Date Escape) எனும் செயலி, மோசமான டேட்டிங்கில் சிக்கிக்கொள்ளும்போது அதிலிருந்து தப்பிச்செல்வதற்கான வழியைச் செயலியே அனுப்பிவைத்து மீட்டெடுக்கிறது.

சாம்சங் நிறுவனமும் புதுமையான டேட்டிங் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. நவீன அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் ஃபிரிட்ஜ்தான் அது. இந்த பிரிட்ஜ் மூலம் டேட்டிங் செய்யும் வகையில் அதன் செயலி அமைந்துள்ளது. அதெப்படி ஃபிரிட்ஜ் மூலம் டேட்டிங் சாத்தியம் எனக் கேட்கலாம். ஃபிரிட்ஜுக்குள் இருக்கும் பொருட்களைக் கொண்டு இந்த டேட்டிங் உத்தி செயல்படுகிறது.

நள்ளிரவு நேரத்தில் பசியோடு ஃபிரிட்ஜைத் திறந்து பார்க்கும்போது, அதில் உள்ள பொருட்கள் பசியைப் போக்க முழுமையாக இல்லாத சூழலில், அந்தப் பொருட்களைப் படம் எடுத்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதேபோல் படத்தைப் பகிர்ந்துகொள்ளும் சக ஃபிரிட்ஜ் நபர்களோடு, அவர்களின் பொருட்கள் பரஸ்பரம் ஒத்துப்போவதன் அடிப்படையில் டேட்டிங் அனுபவம் பரிந்துரைக்கப்படும். விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் ஃபிரிட்ஜுக்கானது என்றாலும், தனியேவும் இந்தச் செயலியை இணையம் மூலம் பயன்படுத்தலாம்: https://www.refrigerdating.com/signup

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x