Published : 22 Dec 2024 07:34 PM
Last Updated : 22 Dec 2024 07:34 PM
புதுடெல்லி: காதல் மற்றும் வாழ்க்கைத்துணையின் மகத்துவம் குறித்து டெல்லியில் வசித்து வரும் 50 வயதான தம்பதியர் தங்களது அனுபவத்தை இணைய தலைமுறையினருடன் பகிர்ந்துள்ளனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை புகைப்படக் கலைஞரும், யூடியூபருமான விபோர் அட்னானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் கான் மார்க்கெட் பகுதியில் நடை போட்ட படி நட்பு, காதல் மற்றும் வாழ்க்கைத்துணை குறித்து அந்த தம்பதியர் பேசியுள்ளனர்.
‘நீங்கள் இருவரும் தம்பதியரா?’ என விபோர் அட்னானி அவர்களிடம் கேட்க, “50 வயது இளம் தம்பதியர்களான நாங்கள் கடந்த 26 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம், 23 ஆண்டுகளாக மண வாழ்க்கையில் சேர்ந்து பயணிக்கிறோம். இது அற்புதமான ஒன்று. இனிப்பான லட்டு சாப்பிடுவது போல வாழ்க்கை இருக்கிறது.
வாழ்க்கை பயணத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு படகில் பயணிப்பதை போல தான் வாழ்க்கை. படகு பயணத்துக்கு காற்று மிகவும் அவசியம். காற்று சாதகமாக இல்லாத நேரங்களில் ஒரு துணை தேவை. அதன் மூலம் ஒரு திசையை நோக்கி நமது பயணம் அமையும். அது மிகவும் முக்கியம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ இணைய சமூகத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதை பார்த்த பலரும் கமெண்ட் மூலம் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT