Published : 30 Sep 2024 05:05 AM
Last Updated : 30 Sep 2024 05:05 AM
சென்னை: நமது வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும் என்றுதமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறைஇயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஆண்டுதோறும் சுமார்1.70 கோடி பேர்மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய் உள்ளிட்ட இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்புஅதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சமம்.
இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி (நேற்று) ‘உலக இதய தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ‘இதயம் சார்ந்து செயல்படுங்கள்’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். நமது இதய பாதிப்புகளுக்கான காரணிகளை தவிர்த்து, நம் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தவிர்க்க முடியும் என்பதே இதன் பொருள்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம், புகைபிடித்தல் ஆகியவை இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள். முதல்வரால் கடந்த 2021ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்ட ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் மக்களின்இல்லங்களுக்கே சென்று உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1.95 கோடி பேர் முதல்முறையாக பயனடைந்தனர். 4.16 கோடி பேர் தொடர் சேவை பெற்று வருகின்றனர்.
இதய நோய் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘இதயம் காப்போம் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. தமிழக பொது சுகாதாரம், நோய்தடுப்பு துறை செயல்படுத்தி வரும் இத்திட்டங்கள், இதய நோய் பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்துமக்களை பாதுகாக்க வழிவகைசெய்கிறது. உலக இதய நாளில் நமதுஇதயம் சார்ந்து செயல்பட்டு மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த உறுதி ஏற்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT