Published : 21 Jul 2024 12:04 AM
Last Updated : 21 Jul 2024 12:04 AM
தம்புலா: இலங்கையில் நடைபெற்று வரும் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது இந்திய அணி. இந்நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மாற்றுத்திறனாளி ரசிகரான ஆதிஷா ஹெராத்தை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு அன்பளிப்பாக ஸ்மார்ட்போனை ஸ்மிருதி வழங்கியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்க்க ஆதிஷா ஹெராத் வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான அவர் வீல்சேரில் மைதானத்துக்கு வந்திருந்தார். அவருக்கு ஸ்மிருதி மந்தனா பேவரைட். போட்டிக்கு பிறகு ஸ்மிருதியை அவர் சந்தித்துள்ளார்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது. பல சவால்களை கடந்து ஆதிஷா, மைதானத்துக்கு வந்திருந்தார். இதன் போது தனது பேவரைட் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதியை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவருக்கு ஸ்மார்ட்போன் பரிசளித்தார் ஸ்மிருதி என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிஷாவின் தாயார் இதற்கு தனது நன்றியை தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார் ஸ்மிருதி. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகளில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
Adeesha Herath's love for cricket brought her to the stadium, despite all the challenges. The highlight of her day? A surprise encounter with her favorite cricketer, Smriti Mandhana, who handed her a mobile phone as a token of appreciation
pic.twitter.com/iqgL2RNE9v— Sri Lanka Cricket (@OfficialSLC) July 20, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT