Published : 18 Jul 2024 10:45 PM
Last Updated : 18 Jul 2024 10:45 PM
புதுடெல்லி: காசியாபாத் நகரை சேர்ந்த முடிதிருத்துநரின் மொபைல்போன் களவு போயுள்ளது. இது குறித்து அறிந்த அவரது வாடிக்கையாளர் ஒருவர் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். அதற்காக பிரத்யேக வழியில் நிதி திரட்டும் முயற்சியை அவர் முன்னெடுத்தார். இந்த சூழலில் நத்திங் நிறுவனம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
அந்த முடிதிருத்துநரின் பெயர் சோனு. அவரது வாடிக்கையாளர் ரோகித் சலுஜா. அவர் தான் நிதி திரட்டும் முயற்சியை சோனுவுக்காக மேற்கொண்டுள்ளார். அதற்காக நிதி திரட்ட உதவும் Milaap தளத்தை அவர் நாடியுள்ளார். அதன் மூலம் ரூ.15,000 திரட்டி, அதனை கொண்டு சோனுவுக்கு போன் வாங்கி தருவது அவர் திட்டம். அதில் அவருக்கு பிடித்த பாடலை பிளே லிஸ்டில் வைத்து தருவது குறித்தும் சுட்டிக்காட்டி இருந்தார்.
தனது முயற்சி சார்ந்து பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘க்யூஆர்’ கோடு அடங்கிய டி-ஷர்டை அணிந்து டெல்லியில் முக்கிய இடங்களில் ரோகித் வலம் வந்துள்ளார். அப்போது கனாட் பிளேஸில் (சிபி) அவரது டி-ஷர்டை கவனித்த எக்ஸ் தள பயனர் ஒருவர் அது குறித்து ட்வீட் செய்திருந்தார். அந்த டி-ஷர்டில் ‘ஆண்களுக்கும் எமோஷன் உண்டு. விவரம் அறிய ஸ்கேன் செய்யவும்’ என ரோகித் குறிப்பிட்டிருந்தார். அது நெட்டிசன்களின் கவனத்தை பெற்று இருந்தது. அந்த பதிவை அவர் பதிவு செய்த போது சுமார் 1,600 ரூபாயை அவர் திரட்டி இருந்தார்.
இந்நிலையில், நத்திங் இந்தியா நிறுவனத்தின் கவனத்துக்கு அந்த ட்வீட் சென்றுள்ளது. அதற்கு பதில் ட்வீட் பதிவு செய்தது அந்நிறுவனம். அதில் புதிய ‘நத்திங் போன் 1’ ஸ்மார்ட்போனுடன் நிற்கிறார் சோனு. அந்நிறுவனத்தின் செயல் நெட்டிசன்களின் நெஞ்சங்களை வென்றுள்ளது.
நத்திங் போன் 1 - சிறப்பு அம்சங்கள்
I'm not crying, you are.
Here's Sonu with his new phone. https://t.co/NMaDTo8JIB pic.twitter.com/jVc5azToS8
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT