Published : 28 Jun 2024 05:39 AM
Last Updated : 28 Jun 2024 05:39 AM
இந்தூர்: தந்தையின் உயிரைக் காப்பற்ற 17 வயது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் அளிக்க மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஷிவ்நாராயாண் பதம் (42). இவருக்கு ஐந்து மகள்கள். இவர் கல்லீரல் நோய்த்தொற்றால் கடந்த 6 ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறார். மருத்துவச் சிகிச்சைகளால் கல்லீரல் குணமடையாததால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தனக்கு கல்லீரல் தானம்செய்ய தனது மூத்த மகள் பிரீத்திமுன்வந்துள்ளார் என்றும், மகளின்கல்லீரலில் ஒரு பகுதியை தானம்அளிக்க நீதிமன்றம் அனுமதிக்கும்படியும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஷால் மிச்ராவிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது: மாநில அரசு நியமித்த மருத்துவ வாரியம் சம்பந்தப்பட்ட சிறுமியின் உடல்நிலையை ஆய்வு செய்தது. நோயுற்ற தந்தைக்கு அந்த சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக அளிக்கலாம் என்று மருத்துவ வாரியம் பரிந்துரை வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விரைந்து மேற்கொள்ளும்படி வழிகாட்டுதல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT