Published : 23 Jun 2024 05:26 PM
Last Updated : 23 Jun 2024 05:26 PM

நாட்டின மாடுகளை காக்கும் மதுரை அவனியாபுரம் சங்கீதா!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: கோசாலை அமைத்து அழியும் நிலையிலுள்ள நாட்டின மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார் மதுரை அவனி யாபுரத்தைச் சேர்ந்த பெண்.

அவனியாபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் குருநாக சுப்பிரமணியன். இவர் மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான அவனியாபுரம் கல்யாண சுந்தரேசவரர் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இவரது மனைவி சங்கீதா(40). இவர் அவனியாபுரத்தில் வாடகை இடத்தில் கோசாலை அமைத்து அழியும் நிலையில் உள்ள நாட்டின மாடுகளை வளர்த்து பராமரிக்கிறார். குடும்ப உறுப் பினர்கள் போல் பார்வதி, பரமேஸ்வரி என பெயர் சூட்டியுள்ளார். சாணத்தை இயற்கை உரம், திருநீறு தயாரிக்க இலவசமாக வழங்கி வருகிறார்.

இதுகுறித்து சங்கீதா கூறியதாவது: 2018-ம் ஆண்டில் இருந்து ஒருவர் தானம் தந்த நாட்டின பசு மாட்டை வளர்க்க ஆரம்பித்தேன். தற்போது காங்கயம், மயிலம் மாடுகள் உள்ளன. இதுதவிர ஜல்லிக்கட்டுக் காளையும் உள்ளது. அழியும் நிலையிலுள்ள கேரளம் மாநிலம், வெச்சூர் இன மாடுகளையும் வளர்க் கிறேன். இது உயரம் 3 அடிக்குள் இருக்கும். மாடுகளுக்கு காலையில் பசுந்தீவனம், உலர் தீவனம், புல், புண் ணாக்கு அளித்து வருகிறேன்.

பால் மூலம் கிடைக்கும் வருவாயை இட வாடகை, தீவனத்துக்கு பயன்படுத்து கிறேன். பசும்பாலை கோயில் அபிஷேகத் துக்கு தருகிறேன். கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கினேன். எனது கணவர், கோசாலையில் நாட்டின மாடுகள் வளர்ப்பதற்கு ஊக்கமும், உதவியும் அளிக்கிறார். பசுமாடுகளை குழந்தைகள் போல் பாவித்து வளர்ப்பதால் மன அமைதி கிடைக்கிறது என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x