Published : 26 Apr 2024 04:14 AM
Last Updated : 26 Apr 2024 04:14 AM
மதுரை: தேனூர் மண்டபத்தில் எழுந் தருளும் கள்ளழகரை காணவரும் பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில், தொழிலாளி ஒருவர் கடந்த 8 ஆண்டுகளாக தர்ப்பூசணி வழங்கி வருகிறார்.
மதுரை மாவட்டம், தேனூரைச் சேர்ந்த தொழிலாளி சடையாண்டி. இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு மீனாட்சி (11), தேஜா என்ற 2 பெண் குழந்தைகள். கள்ளழகரிடம் வேண்டிய படியே இரண்டாவதும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. அதன்படி, தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நாளில் பக்தர்கள் அனைவருக்கும் தர்ப்பூசணியை இலவசமாக வழங்கி வருகின்றனர். நேற்று 8-வது ஆண்டாக ஒன்றரை டன் தர்ப்பூசணியை இலவசமாக வழங்கினர்.
இதில் ஏராளமான பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உள்ளிட்டோர் தர்ப்பூசணி வாங்கி சாப்பிட்டனர். இது குறித்து சடையாண்டி கூறுகையில், எனது வேண்டுதல் நிறைவேறியதால், கடந்த 8 ஆண்டுகளாக தேனூர் மண்ட பத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நாளில் பக்தர்களுக்கு தர்ப்பூசணி வழங்கி வருகிறேன். இடையில் ஓராண்டு கரோனா காலத்தைத் தவிர, மற்ற ஆண்டுகளில் தொடர்ந்து தர்ப்பூசணி வழங்கி வருகிறேன். கட்டிடங்களுக்கு அலங் கார வேலை செய்து வரும் எனக்கு, சில நண்பர்களும் உதவி வருகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT