Published : 26 Mar 2024 07:35 AM
Last Updated : 26 Mar 2024 07:35 AM
ஹைதராபாத்: மக்களவைத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் நாடு முழுவதும் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் பிரச்சாரங்கள், வெற்றி, தோல்வி குறித்த பேச்சாகவே உள்ளது. இந்நிலையில், தெலங்கானாவை சேர்ந்த தந்தை ஒருவர், தனது மகனின் திருமண அழைப்பிதழில், யாரும் திருமணத்துக்கு பரிசு பொருட்கள் வழங்க வேண்டாமெனவும், அதற்குபதில், தேர்தலில் பிரதமர் மோடிக்கு (பாஜக) வாக்களியுங்கள் என்றும் அச்சிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்திகண்டி நரசிம்முலு. இவரது மகன் சாய் குமாருக்கும், மஹிமாராணி என்பவருக்கும் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக திருமண அழைப்பிதழ்கள் மணமகன் வீட்டு சார்பில் அச்சிடப்பட்டது.
அதில், அழைப்பிதழின் மேல் அட்டையின் மீது, பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்டு, அதற்கு கீழ் “பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பதே இந்த திருமணத்திற்கு நீங்கள் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாகும். வேறு பரிசு வேண்டாம் என அச்சிடப்பட் டுள்ளது.
இதுகுறித்து நந்திகண்டி நரசிம்முலு கூறும்போது, ‘‘நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். பிரதமர் மோடிக்கு வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூற எனது மகனின் திருமண விழாவினை உபயோகித்துக் கொள்ள முடிவு செய்து, திருமண அழைப்பிதழில் அதனை தெரிவிக்கலாம் எனஎனது குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டதால், நான் திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என்று அச்சிட்டேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT