Published : 23 Mar 2024 07:13 AM
Last Updated : 23 Mar 2024 07:13 AM
மும்பை: குழந்தைப் பருவத்தில் குறும்புக்கார சிறுமியாக இருந்தவர் இன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சமூகப் பொறுப்பு மிக்க ஆசிரியை ஆன நிஜக்கதையைப் பெண் ஒருவர் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் பகிர்ந்ததில் 1,24,000 பார்வைகள் கடந்து அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது.
பெண் ஒருவரின் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் முன்னாள் மாணவி அலிஷா குறித்து இடம்பெற்ற பதிவுகளிலிருந்து: எனது வகுப்பில் அன்றிருந்த படுசுட்டியான சிறார்களில் ஒருத்தி அலிஷா. எவ்வளவு சேட்டைஎன்றால், தன்னை அடிக்கடி தொந்தரவு செய்தவகுப்புச் சிறுவனின் சில பற்களை உடைத்துவிட்டாள். அலிஷா ஒரு அடங்காப்பிடாரி என்றே இன்னொரு ஆசிரியை என்னிடம் எச்சரித்தார். எனக்கே அலிஷா ‘பாஸ்’ மாதிரிதான். தான் நினைத்ததைச் செய்து முடிப்பாள். மிகவும் புத்திசாலி ஆனால் துளியளவும் பொறுமை அற்றவள்.
இவள் எப்போதாவது ஒழுக்கமாக மாறுவாளா, படிப்பில் நாட்டம் செலுத்துவாளா, பள்ளி படிப்பை முடித்துவிடுவாளா, வாழ்க்கையில் எப்படியாவது பிழைத்துக்கொள்வாளா என்று ஒரு ஆசிரியராக நான் கவலைப்படாத நாளில்லை.
பிறகொரு நாள் தன்னை மிகவும் கவர்ந்த ஆசிரியர் என்ற தலைப்பில் என்னை பற்றி அவள் எழுதியிருந்த கட்டுரை கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகும் என்னுடன் தொடர்பில் இருந்தாள்.
கரோனா காலத்தில் கல்லூரியில் சேர்ந்தாள். அது மிகவும் இக்கட்டான காலம் என்பதால்மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். எனினும்வெற்றிகரமாகப் பட்டப்படிப்பை முடித்து இந்த2024-ம் ஆண்டில் மும்பை பள்ளி ஒன்றில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். எதற்கு ஆசிரியர் பணி,அதுவும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக்கற்பிக்கும் பணியைத் தேர்ந்தெடுத்தாய் எனகேட்டேன். நீங்கள் என் மீது கொண்டிருந்த நம்பிக்கைதான் காரணம் என்றாள். இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT