Published : 13 Mar 2024 11:24 PM
Last Updated : 13 Mar 2024 11:24 PM

ஆடுகளத்தில் ரமலான் நோன்பு திறந்த ஆப்கன் அணியின் நபி, அஸ்மத்துல்லா

அஸ்மத்துல்லா ஷாகிதி மற்றும் முகமது நபி

துபாய்: ரமலான் நோன்பை இஸ்லாமிய மக்கள் உலகம் முழுவதும் தொடங்கி உள்ளனர். இந்தியாவிலும் ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஆடுகளத்தில் ரமலான் நோன்பு திறந்தனர் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்களான முகமது நபி மற்றும் அஸ்மத்துல்லா ஷாகிதி. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். ரமலான் மாதத்தின் முதல் பிறையின் அடிப்படையில் நோன்பு தொடங்கும். அதன்படி நேற்று (மார்ச் 12) இந்தியா உட்பட உலக நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கியது. 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ஈகை திருநாளான ரமலான் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை அன்று அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது களத்தில் பேட் செய்து கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் முகமது நபி மற்றும் அந்த அணியின் கேப்டன் அஸ்மத்துல்லா ஷாகிதி ஆகியோர் தங்களது நோன்பினை திறந்தனர். அது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

இருவரும் நோன்பை கடைபிடித்தபடி பேட் செய்தனர். இந்தப் போட்டியில் 5-வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நபி 48 ரன்களிலும், அஸ்மத்துல்லா 69 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்தது ஆப்கன்.

237 ரன்கள் இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி 119 ரன்களில் சுருண்டது. நபி, 10 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார். இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x