புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட ஜப்பானிய அதிகாரி முத்து படத்தின் பாடலை பாடி அசத்தினார்
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட ஜப்பானிய அதிகாரி முத்து படத்தின் பாடலை பாடி அசத்தினார்

புதுச்சேரி பல்கலை. கருத்தரங்கில் ‘முத்து’ பட பாடலை தமிழில் பாடி அசத்திய ஜப்பானிய அதிகாரி!

Published on

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கருத்தரங்கில் முத்து படத்தின் முழுப் பாடலை தமிழில் ஜப்பானிய அதிகாரி பாடி அசத்தியுள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு வணிகத் துறை சார்பில் மூன்று நாள் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் இன்று தொடங்கியது. இதன் சிறப்பு அமர்வில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் பங்கேற்றார்.

ஜப்பான் - இந்தியா நாடுகளின் வர்த்தகம் சூழல் தொடர்பாக வல்லுநர்களுடன் ஆங்கிலத்தில் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலின் இறுதியில் பேசிய அவர், "தமிழ் எனக்கு பிடித்த மொழி.எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும். தமிழ் சினிமா பாடலும் பாடுவேன்" என்று குறிப்பிட்டார்.

அதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் இருந்து ‘ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி, விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி’ என்று முழு பாடலையும் பாட அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.

அவர் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அத்துடன் தனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும் குறிப்பாக ரஜினி படங்கள் பிடிக்கும் என்று கருத்தரங்கில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in