Published : 02 Feb 2024 05:10 PM
Last Updated : 02 Feb 2024 05:10 PM
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சி சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளவட்டம்-பார்வதி தம்பதி மகன்கள் ராமு (32), லட்சுமணன் (32). இரட்டை சகோதரர்களான இவர்கள், கடந்த 9 ஆண்டுகளாக மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர். மேலும், அவர்கள் நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.
இந்த சகோதரர்களுக்கு 7 ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. அதில் 25 சென்டில் விளையும் நெல்மணிகளை கோயிலுக்கு வழங்கி வந்தனர். இந்நிலையில் பெற் றோரின் கோரிக்கையை ஏற்று, இந்தாண்டு கண்டவ ராயன்பட்டியில் உள்ள ட்ரூபா முதியோர் இல்லத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அறுவடைப் பணியைத் தொடங்கினர்.
இதுகுறித்து லட்சுமணன் கூறியதாவது: கடந்த காலங்களில் எங்களது நிலத்தில் விளையும் குறிப்பிட்ட நெல்மணிகளை கோயிலுக்கு வழங்கி வந்தோம். இந்தாண்டு முதியோர் இல்லத்துக்கு வழங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
கதிரை அறுவடை செய்து, அதில் கிடைக் கும் நெல்லை வழங்குகிறோம். குறைந்தது 12 மூட்டைகளாவது கிடைக்கும். மேலும் வைக்கோலையும் முதியோர் இல்லத்தில் உள்ள பசு மாடுகளுக்கு வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இரட்டை சகோதரர்களின் இச்செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT