Published : 23 Jan 2024 09:00 AM
Last Updated : 23 Jan 2024 09:00 AM

ரூ.40,000 முதல் ரூ.13 லட்சம் வரை - நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜல்லிக்கட்டு காளைகள் விலை மதிப்பு உயர்வு

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் புகழ்பெற ஆரம்பித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிக்கு இணையாக தற்போது ஜல்லிக்கட்டை பிரபலப்படுத்த மதுரை அருகே அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் சர்வதேச தரத்தில் பிரம் மாண்ட விளையாட்டு அரங்கை தமிழக அரசு கட்டியுள்ளது. கடந்த காலங்களில் கிராமங் களில் விவசாயிகள் வீடுகளில் பசு, எருமை, உழவு மாடுகள் வளர்ப்பர். இவற்றுடன் ஜல்லிக்கட்டு காளை களையும் தனிக் கவனமும், பாசமும், உணவும் கொடுத்து வளர்ப்பர்.

காளைகளுக்கு பருத்தி, பச்சரிசி, அரை மூடி தேங்காய், கம்பு மாவு, கோதுமை, மக்காச்சோளம், கானப் பயறு, உளுத்தம் தூசி மற்றும் முட்டை போன்றவற்றை வழங்கி அவற்றுக்கு நீச்சல் பயிற்சி, ஓட்டம், கொம்புகளை கொண்டு மண்ணை குத்த விடுதல் போன்ற பயிற்சிகளை வழங்கு கிறார்கள். ஜல்லிக்கட்டு களத்தில் வாடி வாசலில் அவிழ்த்து விடப் பட்டதும் நின்று விளையாடும் காளைகள், சிறந்த காளைகளாக கருதப் படுகின்றன.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மைய மாநில நிறுவனத் தலைவர் முடக்காத்தான் மணி கூறியாவது: தமிழகத்தில் மட்டும் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக் கட்டு காளைகள் உள்ளன. அவர்கள் காளை மீது பெரும் தொகையை முதலீடு செய்கிறார்கள். மதுரை பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப் பதையும், அலங்கா நல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கள் காளையை அவிழ்ப்பதையும் சமூக அந்தஸ்தாக கருதுகிறார்கள்.

அவர்களுக்கு காளைகள் வெல்லும் பரிசு இரண்டாம் பட்சம் தான். மதுரை அவனியாபுரம், பால மேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் காளைகள் நட்சத்திர அந்தஸ்து பெறுகின்றன. இந்த காளைகளுக்கு சந்தைகளில் விலையும் அதிகம். முன்பு ஜல்லிக்கட்டு காளைகள் ரூ.4 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையே விலை போனது. தற்போது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.13 லட்சம் வரை விற்கப் படுகிறது.

சிறந்த காளைகளை, அதிக விலை கொடுத்து வாங்குவதை காட்டிலும், கன்றாக இருக்கும்போது எடுத்து வளர்த்து பயிற்சி கொடுத்து போட்டிகளில் ஈடுபடுத்தி வெற்றி பெற்றால் நாம் சொல்வது தான் விலை. அரசியல் வாதிகள், வசதி படைத்தவர்கள் காளை தோற் றால் அந்த காளையை விற்றுவிடு வார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், விவசாயிகள் தோற்றாலும் ஜெயித்தாலும் காளைகளை கடைசிவரை தங்கள் வீட்டில் ஒருவராகவே வளர்த்து வருவர்.

பொதுவாக போட்டிகளில் புலிக்குளம் காளைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த காளைகள் உளி கொம்பு குத்து மாடு, கிடை மாடு, புலிக்குளம் மாடு ஆகிய பெயர்களில் அழைக் கப்படுகின்றன. விருதுநகர், தேனி மாவட்டத்தில் புலிக்குளம் மலை மாடுகளும், மதுரை மாவட்டத்தில் புலிக்குளம் கிடைமாடுகளும், சிவகங்கையில் புலிக்குளம் தொழு மாடுகளும், ராமநாதபுரம் கால்கட்டு நாட்டு மாடுகளும் அதிகளவு போட்டிகளில் பயன்படுத்தப் படுகின்றன.

இதில் மதுரை மாவட்டத்தில் வளர்க்கப்படும் புலிக்குளம் நாட்டு கிடை மாடு, ஆக சிறந்த ஜல்லிக்கட்டு மாடுகளாக கருதப் படுகின்றன. இது தவிர திருச்சி நாட்டு குட்டை மாடு, தொழு மாடு, கொல்லி மலை குட்டை மாடுகளும் சிறந்த காளை களாக கருதப் படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x