Published : 28 Dec 2023 05:43 AM
Last Updated : 28 Dec 2023 05:43 AM
நாகர்கோவில்: முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு,கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தனது பூர்வீகஓட்டு வீட்டை, ஏழை மாணவ,மாணவிகள் பயனடையும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றி, அதற்கு ‘ரெத்தினம்மாள் செல்லப்பன் நூலகம்’ என தனது தாய் -தந்தையின் பெயரைச் சூட்டிஉள்ளார்.
இந்த நூலகத்தை அவரது தாயார் ரெத்தினம்மாள் நேற்றுகுத்துவிளக்கேற்றித் திறந்துவைத்தார். நூலகத்துக்கு வந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை சைலேந்திர பாபு வழங்கினார்.
இங்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி,நீட், வங்கித் தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படும்.
இதுகுறித்து முன்னாள் டிஜிபிசைலேந்திர பாபு கூறும்போது, “இந்த வீட்டில் படித்துதான் நான்உயர் பதவிக்கு வந்தேன். அதேபோல, இந்தப் பகுதி இளைஞர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க இந்த நூலகம் வழிகாட்டியாகத் திகழும். மாணவர்கள் அறிவியல் கற்க வேண்டும். இங்கு பயிலும் மாணவர்கள் புதியனவற்றைக் கண்டுபிடித்து, நோபல் பரிசு பெற வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT