Published : 09 Dec 2023 06:15 AM
Last Updated : 09 Dec 2023 06:15 AM
புதுச்சேரி: நைஜீரியாவில் 85 நாடுகள் பங்கேற்ற மிஸ் ஆப்பிரிக்கா அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற புதுச்சேரி மாடல் அழகி 2-ம் இடத்தை பெற்றார். நாடு திரும்பிய அவர் முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார். புதுச்சேரியைச் சேர்ந்தவர் சான் ரேச்சல் காந்தி (23). சிறிய வயதிலேயே தாயை இழந்த இவர் தந்தையுடன் வசிக்கிறார். தந்தையின் ஊக்கத்தால் மாடலிங் துறையில் நுழைந்துள்ள சான்ரேச்சல், தனது நிறத்தை சுட்டிக்காட்டி வந்த விமர்சனத்தால் குழந்தை பருவத்திலிருந்து பல சங்கடங்களை எதிர்கொண்டார். நிறத்தை அடிப்படையாக பார்க்கும் பலரின் எண்ணத்தை மாற்றி மாடலிங் துறையில் நுழைந்த இவர்,மிஸ் புதுச்சேரி - 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் - 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு - 2019, குயின்ஆப் மெட்ராஸ் - 2022 அழகி போட்டிகளில் விருதுகள் வென்றார்.
அண்மையில் இவர் மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா - 2023 விருதுக்கு தேர்வானார். இதைத்தொடர்ந்து ஆப்ரிக்க நாட்டின் நைஜீரியாவில் கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நடந்த மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். நைஜீரியாவுக்கு செல்ல நிதியில்லாமல் இருந்த போது முதல்வரை சந்தித்து உதவகோரினார். இதையடுத்து ரூ.1.7 லட்சத்துக் கான விமான டிக்கெட்டை வழங்கு வதாக முதல்வர் உறுதி தந்தார். இதையடுத்து நைஜீரியா சென்று போட்டியில் வென்ற சான் ரேச்சல் காந்தி நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT