Published : 26 Nov 2023 04:12 AM
Last Updated : 26 Nov 2023 04:12 AM

கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஜெர்மன் உணவுத் திருவிழா தொடக்கம்

கோவை: கோயம்புத்தூர் கோத்தே சென்ட்ரம் சார்பில், கோவை ரத்னா ரீஜன்ட் ஹோட்டலில் ‘ஜெர்மன் அக்டோபர் பெஸ்ட்’ உணவுத் திருவிழா நேற்று முன்தினம் (நவ.24) தொடங்கியது. இன்று வரை (நவ.26) வரை 3 நாட்கள் நடக்கிறது.

நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு நாட்கள் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடந்த உணவுத் திருவிழா, இன்று (நவ.26) காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரையும் பின்னர், மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடைபெறவுள்ளது. ஜெர்மன் ரினெலன்ட் பாலடினடேவில் உள்ள சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் கர்ட் ஹென்கென்ஸ்மியர் கோவை வந்துள்ளார்.

இவர், நவம்பர் இறுதி வரை இங்கு தங்கியிருப்பார். உலகத் தரம் வாய்ந்த ஜெர்மன் நாட்டு சமையலை விருந்தளிக்க உள்ளார். இந்த உணவுத் திருவிழா கொண்டாட்டத்துடன், செவிக்கும் விருந்தளிக்க ‘ப்ளெச்ஸாவ்க’ ஜெர்மன் இசைக் குழுவினரும் கோவை வந்துள்ளனர். இவர்கள் ஜெர்மன் அக்டோபர் பெஸ்ட் இசையை இசைக்க உள்ளனர். இவர்கள் அர்மீன் செய்பெர்ட் தலைமையில் வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நடந்த உணவுத் திருவிழா தொடக்க விழாவில், ஜெர்மன் தூதரக அதிகாரி மைக்கலே குச்லர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஜி.டி.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபால், ஜி.டி வைலர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.டி.ராஜ் குமார், கோத்தே சென்ட்ரம் இயக்குநர் செல்வி அகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான டிக்கெட் அரங்கின் நுழைவு வாயிலிலும், கோத்தே சென்ட்ரம் நிறுவனத்திலும், புக் மை ஷோ இணையத்திலும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு - 95855 22044 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x