Published : 19 Oct 2023 01:57 PM
Last Updated : 19 Oct 2023 01:57 PM
மதுரை: 2023-லும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக ஓவியம் வரைந்துள்ளார் மதுரையைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணியினர் தொடர்ந்து 8-வது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இந்த உலக கோப்பை தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா தலை மையிலான அணியினரின் உத்வேகமான விளையாட்டு, இந்திய அணி உலகக் கோப்பையை வென்றெடுக் கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டி யன் ‘கிரிக்கெட் கோப்பை’ வடிவில் வித்தியாசமான ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். இந்த ஓவியத்தில் ஹூக்கும், இந்திய புலிகளின் ஹூக்கும், வரலாறு திரும்புது., உலக சாம்பியன் 1983, 2011 மற்றும் 2023 வெல்க இந்தியா, ‘அலப்பறை கிளப்புகிறோம், சாம்பியன் கப்ப தூக்குகிறோம், உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா என்றுமே சூப்பர் ஸ்டார்’ வாழ்த்துகளுடன் பாசக்கார மதுரைக்காரங்க போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து தங்கராஜ்பாண்டியன் கூறுகையில், ‘1983-ல் கபில்தேவ் தலை மையிலான இந்திய அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. 2011-ல் கேப்டன் மகேந்திரசிங் டோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்றோம். 2023-ல் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் நிச்சயம் கோப்பையை வெல் வோம் என்ற நம்பிக்கை உள்ளது.
அதுவும் போட்டிகள் இந்தியாவில் நடப்பது வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக உலகக் கோப்பை வடிவிலான வித்தி யாசமான ஓவியத்தை வரைந்துள்ளேன். ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை வரைந்தேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT