Published : 02 Oct 2023 04:04 AM
Last Updated : 02 Oct 2023 04:04 AM
கிருஷ்ணகிரி: சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, 107 வயதைக் கடத்த மூத்த பெண் வாக்காளருக்கு, கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சரயு பொன்னாடை அணிவித்துக் கவுரவித்தார்.
வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதி நாடுவானப் பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராமசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த 107 வயதான முத்தம்மாளுக்கு, ஆட்சியர் சரயு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் குத்து விளக்கு ஏற்றி வைத்து, மூத்த குடிமக்களுக்குப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
பின்னர் ஆட்சியர் கூறும்போது, சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் 1-ம் தேதி 100 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களைக் கவுரவிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 66 மூத்த வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர்” என்றார். சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT