Published : 23 Aug 2023 03:38 PM
Last Updated : 23 Aug 2023 03:38 PM

மதுரையில் வீட்டில் நூலகம் அமைத்து அறிவுக்கண் திறக்கும் அதிகாரி

மதுரையில் வீட்டில் நூலகம் அமைத்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர். மதுரை அண்ணாநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பி.என்.சுந்தரேசன்(64). காப்பீட்டு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான இவர், அன்பு நண்பர்கள் குழு மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். மேலும் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, வீட்டில் புத்தகச் சாலை அமைத்துள்ளார். மேலும் பழங்கால நாணயச் சேகரிப்பிலும் ஆர்வமாக உள்ளார்.

தான் சேகரித்த நாணயங்களுடன் பி.என்.சுந்தரேசன்.

இதுகுறித்து பி.என்.சுந்தரேசன் கூறியதாவது: சிறு வயதிலிருந்தே பள்ளிப் பாடங்கள் தவிர்த்து புத்தகங்கள், நூல்கள், இதழ்கள், சிறுகதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம். நான் படிப்பதோடு நண்பர்கள், மற்றவர் களுக்கும் படிக்கக் கொடுப்பேன்.

இதற்காக, வீட்டில் தனி அறையை ஏற்படுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் படிப்பதோடு, பாதுகாத்தும் வருகிறேன். மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண் ணத்தில் பள்ளி களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகிறேன்.

ஓட்டை காலணா நாணயம்

அவர்களுக்கு படிக்க நூல்களையும் அளிக்கி றேன். மேலும் பழங்கால இந்திய நாணயங்கள், வெளி நாட்டு நாணயங்களை சேகரித்து வருகிறேன். என்னிடம் 30-க்கும் மேற் பட்ட பழங் கால நாணயங்கள் உள்ளன. எனக்குப் பின்னால் அரசு நூலகங்களுக்கு புத்தகங் களை வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x