Published : 15 Jul 2023 05:55 PM
Last Updated : 15 Jul 2023 05:55 PM
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நேற்று விண்ணில் சீறிப்பாய்ந்தபோது அதை சென்னையிலிருந்து டாக்கா சென்ற விமானத்தில் இருந்த பயணிகளை ஜன்னல் வழியாக பார்க்கும்படி விமானி அப்டேட் கொடுத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
Launch of Chandrayan 3 from flight. Sometime after takeoff from Chennai to Dhaka flight, pilot announced to watch this historical event pic.twitter.com/Kpf39iciRD
— Dr. P V Venkitakrishnan (@DrPVVenkitakri1) July 15, 2023
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நேற்று (ஜூலை 15) மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 41 நாள் பயணத்துக்கு பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவை சந்திரயான்-3 சென்றடைகிறது.
இந்நிலையில், நேற்று சந்திரயான் புறப்பட நேரத்தில் வானில் சென்று கொண்டிருந்தது சென்னை - டாக்கா விமானம். அப்போது விமானி சுதாரித்துக் கொண்டு உடனடியாக பயணிகளை ஜன்னலின் வழியே பார்க்கும்படி அறிவுறுத்தினார். வரலாற்று சிறப்புமிக்கத் தருணத்தை விமானப் பயணிகளும் பார்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT