Published : 01 Jun 2023 06:17 AM
Last Updated : 01 Jun 2023 06:17 AM

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறையில் மறுமலர்ச்சி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்துஸ்துக்கான 370-வது சட்டப் பிரிவை கடந்த 2019-ல்ரத்து செய்த பிறகு அங்கு சுற்றுலாத் துறை வளர்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது.

காஷ்மீரின் ஸ்திரத்தன்மையை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ஜி20 நாடுகளின் சுற்றுலா தொடர்பான மாநாடு கடந்த மே 22-24 தேதிகளில் நடத்தப்பட்டது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

370-வது சட்டப்பிரிவு நீக்கத் துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் கலை மற்றும் விளையாட்டு துறைகளும் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளதாக வால் ஸ்டீரிட் ஜர்னல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு கடந்த 2008-ல் 77 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.80 கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயம் சார்ந்த ஒட்டுமொத்த பொருளாதாரம் கடந்த நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்க ரயில் பாதை திட்டங்களை பிரதமர் மோடி அதிக அளவில் செயல்படுத்தியதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x