Published : 26 May 2023 09:34 AM
Last Updated : 26 May 2023 09:34 AM

எல்ஐசி நிகர லாபம் 566% உயர்வு

கோப்புப்படம்

புதுடெல்லி: எல்ஐசி 2022-23 நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில் ரூ13,428 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது 2021-22 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 566 சதவீதம் அதிகம் ஆகும். அக்காலாண்டில் எல்ஐசி ரூ.2,371 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

அதேசமயம், எல்ஐசியின் மொத்த வருவாய் கடந்த நான்காம் காலாண்டில் ரூ.2 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 2021-22 நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் அதன் மொத்த வருவாய் ரூ.2.15 லட்சம் கோடியாக இருந்தது.

நிகர பிரீமியம் வருவாய் 8 % குறைந்து ரூ.1.31 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டில் நிகர பிரீமியம் வருவாய் ரூ.1.43 லட்சம் கோடியாக இருந்தது. எல்ஐசி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வெளியானதையடுத்து, நேற்றைய தினம் பங்குச் சந்தையில் அதன் பங்கு மதிப்பு 1.62 சதவீதம் உயர்ந்து ரூ.603-க்கு வர்த்தகமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x